உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

மன்னியும்; இவர்கள் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்,” என்று வேண்டினார்.

(18) தாழ்வில்லை.

(19) தலையால் வந்ததைக் காலால் தள்ளுகிறான்.

(20) ஆல் பழுத்தால் அங்கே, அரசு பழுத்தால் இங்கே.

(21)

உலகிலேயே தாய்மொழியைப் பேணாத நாடு தமிழ்நாடு ஒன்றுதான்.

(22) குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.

(23) கொல்லுவதுங் கொலை; கொல்லக் கருதுவதும் கொலை. (24) சீரைத் தேடின் ஏரைத் தேடு.

குறிப்பு : (1) வாக்கிய வகைகளுள் : தனிவாக்கியம், தனித்து நின்று தொழில் நடத்தும் ஒரு தலைவனைப் போன்றது; கூட்டுவாக்கியம், கூட்டாகவிருந்து தொழில் நடத்தும் பல தலைவரைப் போன்றது; கலப்புவாக்கியம், ஏவலருடன் சேர்ந்து தொழில் நடத்தும் ஒரு தலைவனைப் போன்றது; கதம்ப வாக்கியம், ஒரு பெருந்தொழில் நடத்துதற்குக் கூட்டுத் தலைவரும் ஏவலரைக் கொண்ட தலைவரும் கூடிய பெருங்கூட்டைப் போன்றது.

(2)

வாக்கியங்கள், பொருட்போங்குபற்றி,

(i)

(ii)

விளம்பு வாக்கியம், (Declarative Sentence) அல்லது உறுதலை வாக்கியம் (Assertive or Affirmative Sentence). ஏவல் வாக்கியம் (Imperative Sentence)

(iii) வினா வாக்கியம் (Interrogative Sentence)

(iv) உணர்ச்சி வாக்கியம் (Exclamatory Sentence) என நால் வகைப்படும்.

ஒரு செய்தியை விளம்பும் அல்லது உறுதிப்படுத்திக் கூறும் வாக்கியம் விளம்பு வாக்கியம் அல்லது உறுதலை வாக்கியம். சாற்று வாக்கியம் எனவும் படும்.

எ-டு : இன்று மழை வரும்.

சேரன் செங்குட்டுவன் குமரிமுதல் பனிமலைவரை தன்னடிப் படுத்தினான்.

து

ஏவலும் வேண்டுகோளும் வாழ்த்தும்பற்றிய வாக்கியம் ஏவல் வாக்கியம்.