உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

எ-டு : 'செய்வன திருந்தச் செய்'. க்குச் சோறிடுக.

தமிழ் வாழ்க!

ஒன்றைப்பற்றி வினவும் வாக்கியம் வினா வாக்கியம்.

எ-டு : கூட்டுடைமை யாட்சிக்கும் (Socialism) பொதுவுடைமை யாட்சிக்கும் (Communism) வேற்றுமை யாது?

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாமா?

53

உள்ளத்திலெழும் ஒரு வலிய உணர்ச்சியை வெளிப்படுத்தும்

வாக்கியம் உணர்ச்சி வாக்கியம்.

எ-டு : கற்பகப் பறவை (Paradise Bird) எவ்வளவு அழகாயிருக் கின்றது!

காந்தியடிகளைச் சுட்டுக்கொல்ல எத்துணைக் கன்னெஞ்சு வேண்டும்!

8. சொல்முறை (Order of Words)

சொற்கள் வாக்கியத்தில் நிற்கும் முறை சொன்முறையாகும்.

தழுவும் சொல் முன்னும் தழுவப்படும் சொல் பின்னும் நிற்றலே, இயல்பான முறையாம். சொல்லுக்குச் சொன்னது சொற்றொடர்க்கும் ஒக்கும்.

ஒரு கருத்தை வற்புறுத்துமாயின், சில சொற்களும் தொடர்களும் இயல்பான முறை மாறியும் வரலாம்.

பெயரெச்சம் எப்போதும் பெயருக்குமுன் நிற்றல் வேண்டும். எ-டு : போன காரியம்

பெரிய வீடு

வினையெச்சம், வினைமுற்றுக்கும் பெயரெச்சத்திற்கும் பிற வினையெச்சத்திற்கும் முன் நிற்றல் இயல்பு; பின் நிற்றல் ஒரு பயன் நோக்கியது.

எ-டு: வந்து போனான் (இயல்பு)

போனான் வந்து (பயன் நோக்கியது)

குலம் தொழில் புலமை தவம் பட்டம் பதவி முதலியனபற்றி வழங்கும் சிறப்புப் பெயர்கள், இயற்பெயருக்கு முன்னும் பின்னும்