உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

நிற்கலாம். முன் நிற்பது பண்டை முறை; பின் நிற்பது இற்றை முறை. முன் நிற்பின், இரு பெயரும் இயல்பாயிருக்கும்; பின் நிற்பின், இயற்பெயரின் இறுதி பெரும்பாலும் திரியும்.

பண்டை முறை

குலம் :

சோழன் நலங்கிள்ளி

குறமகள் இளவெயினி

தொழில் :

மருத்துவன் தாமோதரன்

ஆசிரியன் முத்துவீரன்

புலமை :

இற்றை முறை

நலங்கிள்ளிச்சோழன் (இளவெயினிக் குறமகள்)

தாமோதர மருத்துவன் முத்துவீரவாசிரியன்

சாத்தப்புலவன்

புலவன் சாத்தன்

தெய்வப்புலவன் திருவள்ளுவன்

(திருவள்ளுவத் தெய்வப்புலவன்)

தவம் :

முனிவன் அகத்தியன்

பட்டம் :

ஏனாதி மாந்தக்கொங்கன்

பதவி :

தலைமையாசிரியர் தியடோர்

அகத்திய முனிவன்

மாந்தக்கொங்கேனாதி

தியடோர் சாமுவேல் தலைமையாசிரியர்

சாமுவேல்

முதலமைச்சர் (ஓமாந்தூர்)

இராமசாமி (இரெட்டியார்)

இராமசாமி முதலமைச்சர்

பட்டப்பெயர்களும் பதவிப்பெயர்களும் தவிர மற்றெல்லாச் சிறப்புப் பெயர்களும், இன்று இயற்பெயர்க்குப் பின்னரே வரும்.

எ-டு : முத்துசாமி ஐயர்

சாமிநாத பண்டிதர்

பெரியசாமிப் புலவர்

குறிப்பு : (1) உயர்ந்தோரைக் குறிக்கும் இயற்பெயரும் சிறப்புப் பெயருமாகிய இருவகைப் பெயர்களும், பெரும்பாலும் உயர்வுப்பன்மை விகுதி பெற்றே வழங்கும்.

எ-டு : கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

(2) உயர்வுப்பன்மை விகுதிபெற்ற சிறப்புப் பெயர்க்கு முன் வரும் இயற்பெயர்கள், உயர்வுப்பன்மை விகுதி பெறா; தனித்துவரின் பெறும்.