உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

அகத்திய முனிவர்

அகத்தியனார், அகத்தியர் பெரியசாமிப் புலவர்

பெரியசாமியார்

ஐயாத்துரை முதலியார்

ஐயாத்துரையார்

55

அகத்தியனார் முனிவர் என்றாவது, பெரியசாமியார் புலவர் என்றாவது, ஐயாத்துரையார் முதலியார் என்றாவது, வராமை காண்க.

க்காலப் பட்டபெயர்களுள், ஆங்கிலக்கல்விப் பட்டங்க ளொழிந்த பிறவெல்லாம் முற்காலப் பட்டப் பெயர்கள் போன்று, இயற்பெயருக்கு முன்னரே நிற்கும்.

எ-டு : இராவ் சாகிபு ஆபிரகாம் பண்டிதர்

வித்துவான் S. ஆறுமுக முதலியார், (M.A., B.O.L., L.T.) பண்டித நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்

மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்.

மகாமகோபாத்தியாய தாட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர்.

பெரியார் மகான்மா என்னும் பட்டப்பெயர்கள் பெயருக்கு முன்னும் பின்னும் நிற்கும்.

எ-டு : பெரியார் ஈ.வே. இராமசாமி, ஈ.வே. இராமசாமிப் பெரியார்.

மகான்மா காந்தி, காந்தி மகான்மா.

யற்

பண்டிதர் என்னும் பெயர் பட்டமல்லாது அறிவும் தொழிலும்பற்றியதாயின், இயற்பெயருக்குப் பின் வரலாம். எடுத்துக்காட்டு மேலே காண்க. பண்டிதன் புலவன் வித்துவான் நாவலன் என்னும் பெயர்கள், தொடர்ந்துவரின் பண்டித புலவ வித்துவ நாவல என ஈறுகெட்டுப் பெயரெச்சமாகும்.

பல காரணம்பற்றிய அடைமொழிகளும் சிறப்புப் பெயர் களும் இயற்பெயருக்குமுன் அடுக்கிவரின், இடப்பெயர் முன்னும் பிறபெயர் அதன் பின்னும் வரும்.

எ-டு: மாங்குடி மருதனார். (ஊர்ப்பெயர் மட்டும் அடைமொழியாய் வந்தது).

சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் (நாட்டுப் பெயரும் ஊர்ப் பெயரும் இயற்பெயர் போன்ற சிறப்புப் பெயருக்குமுன் வந்தன).