உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை - (ஊர்ப் பெயரும் பட்டப்பெயரும்).

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் - (ஊர்ப்பெயரும் தந்தை பெயரும் முறைப்பெயரும்).

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் (ஊர்ப்பெயரும் தொழிற்பெயரும் பிறபெயரும்).

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஊர்ப்பெயரும் ஊர்ப்பகுதிப் பெயரும் உறுப்புப் பெயரும்).

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - (ஊர்ப்பெயரும் பதவிப் பெயரும்).

மதுரை ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியன் (ஊர்ப்பெயரும் தொழிற்பெயரும் குடிப்பெயரும்).

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்

(நாட்டுப் பெயரும் ஊர்ப்பெயரும்

குலப்பெயரும் கோத்திரப் பெயரும்.)

இவற்றில், இறுதியில் வந்தவை பெரும்பாலும் இயற்பெயர்.

'முதுகண்' என்பது, ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்து, அரசர்க்கும் அரசியர்க்கும் அறிவுரை கூறும் இருபாலாரின் பொதுப்பெயர்.

இடப்பெயர்

சிறுபான்மை

இயற்பெயரையொட்டி

வழங்குவதுண்டு. அங்ஙனம் வழங்கும்போது முதலெழுத்தளவில் குறுகியும் வழங்கும்.

எ-டு : உ. வே. சாமிநாதையர், உ - உத்தமதானபுரம்.

இடப்பெயரல்லாத பிற பெயர்கள் வரின், பின்வரும் முறையில்

வரலாம்.

66

"ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன்”.

(தொல். கிளவியாக்கம், 42, சேனா. உரை)

இத் தொடரில், ஆசிரியன் என்பது தொழிற்பெயர்; பேரூர்கிழான் என்பது 'செட்டிநாட்டரசர்' என்பது போன்ற பட்டப்பெயர்; செயிற்றியன் என்பது புலமைபற்றிய பெயர்; இளங் கண்ணன் என்பது முதுகண்ணனுக்குக் கீழ்ப்பட்ட பதவிப்பெயர்; சாத்தன் என்பது இயற்பெயர்.

அரசர் பெயர்கள் பின்வரும் முறையில் வரும்.