உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

சோழன் செங்கணான்

57

குடிப்பெயரும் இயற்பெயரும்.

சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி குடிப்யெரும் உடைமைபற்றிய பெயரும் இயற்பெயரும்.

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் குடிப்பெயரும் அருஞ்செயல்பற்றிய பெயரும் இயற்பெயரும். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் குடிப்பெயரும் வெற்றிபற்றிய பெயரும் இயற்

செழியன் பெயரும்.

-

பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி குடிப்பெயரும் இறந்தகம்பற்றிய பெயரும் இயற்பெயரும்.

மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணன்

பெயரும் பட்டப்பெயரும் இயற்பெயரும்.

குடி என்றது இங்கு மரபு (வமிசம்).

-

குடிப்

குணமும் உறுப்பும் பொருளும்பற்றிய சொற்கள் சேர்ந்து வரும் பெயர்த்தொடர் மொழிகளில், குணச்சொல் முன்பும் உறுப்புச் சொல் இடையும் பொருட்சொல் கடையும் நிற்கும்.

பொருள் என்பது உறுப்புகளையுடைய உடம்பு.

எ-டு : முத்தலைச் சூலம் செங்கால் நாரை

பெருந்தலைச் சாத்தன்

ங்ஙனம் வரும் பெயர்த்தொடர் மொழிக்கு வண்ணச் சினைச்சொல் என்று பெயர். வண்ணம் என்பது நிறத்தை யுள்ளிட்ட குணம். சினை என்பது உறுப்பு. வண்ணச் சொல்லையும் சினைச் சொல்லையும் உடைய பொருட்சொல், வண்ணச்சினைச் சொல்.

தை அடைசினை முதற்பெயர் என்றும் அழைக்கலாம். அடை என்பது குணத்தைக் குறிக்கும் அடைமொழி. முதல் என்பது உடம்பு. அடைமொழி சினைப்பெயர் முதற்பெயர் என்னும் முறையில் வரும் தொடர்ப்பெயர், அடைசினை முதற்பெயர்.

கால்செந்நாரை தலைப்பெருஞ்சாத்தன் என, வேறு முறையில்

வண்ணச்சினைச் சொல் வரா.

அடை சினை என்னும் இரண்டில் ஒன்றே முதலையடுத்து வருவதுமுண்டு.