உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு: வெண்ணெல், வால்மிளகு

செந்நாரை, மண்டையெறும்பு

பெருஞ்சித்திரனார், முடமோசியர்

இவ்விரண்டாக இணைந்து வழங்கும் இனைமொழிகளில், எச்சொல் மரபாக முன் நிற்கிறதோ அச் சொல்லே என்றும் முன் நிற்றல் வேண்டும்.

எ-டு : ஏறத்தாழ, சீரும் சிறப்பும், வீடுவாசல்.

இவற்றை முறைமாற்றல் கூடாது.

வாக்கியங்களில், எழுவாய் முன்னும் செயப்படுபொருள் டையும் பயனிலை கடையும் நிற்றல் இயல்பாம்.

முண்டு.

எ-டு : மறுமை உண்டு.

உதயகுமரன் மணிமேகலையைக் கண்டான்.

பொருளை வற்புறுத்துவதற்காக, இம் முறை மாறி வருவது

எ-டு : உண்டு மறுமை.

கண்டான் மணிமேகலையை உதயகுமரன்.

கண்முன் இராத படர்க்கைப் பொருள்களைப்பற்றிக் கூறும்போதும் எழுதும்போதும், இயற்பெயரை சுட்டுப்பெயரைப் பின்னும் கூறவேண்டும்.*

முன்னும்

எ-டு (1) பரிதிமாற் கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியார், அளவிறந்த தமிழ்ப்பற்றுடையவர். அவர் எழுதிய நூல்களைப் படித்தவர்க்கு இவ் வுண்மை விளங்கும்.

(2) தீக்கோழி பாலைநிலத்தில் வாழும் மிகப் பெரிய பறவை. அதற்கு இரண்டே விரல்களுண்டு.

காரணத்தையும் ஏதுவையும் குறிக்கும் சுட்டடியிடைச் சொல்லும், காரணக் கூற்றிற்குப் பின்னரே வரும்.

எ-டு : (1) தமிழ்நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தற்குறிகள். அதனால், தமிழ் தழைத்தோங்குவதற்கு மிகுதியாய் இடமில்லை.

(2) பனி (இமய) மலை யுச்சியில் சில கடற்பொருள்கள் கிடைக்கின்றன. இதனால், அது ஒருகாலத்தில் கடலுக் குள் மூழ்கியிருந்தமை ஊகிக்கப்பெறும்.

இயற்பெயர்க்குப் பின்வரும் சுட்டுப்பெயரைப் பண்டறிசுட்டு என்பர்.