உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

61

முன்னேறும் வழி? தாய்மொழியைப் பேணாத நாடு தமிழ்நாடு தவிர வேறு ஏதேனும் உண்டா?

பொதுவான பயனிலையுஞ் செயப்படுபொருளும் கொண்ட கிளவியங்களைப் புணர்த்தெழுதும்போது, டையிட்டு நிற்கும்

தொடர்புற்ற சொற்களை, முன்னின்றதொடு தொடர்புடையதை முன்னும் பின்னின்றதொடு தொடர்புடையதைப் பின்னுமாக, நிரல்பட (வரிசைப்பட) நிறுத்துவது நிரனிறை எனப்படும்.

எ-டு : (1) முருகனும் பெருமாளும் கணக்கில் முறையே நாற்பது வரையமும் ஐம்பது வரையமும் பெற்றார்கள்.

(வரையம் = Mark)

(2) மயிலுங் குயிலும் கார்காலத்தை முறையே விரும்புவதும் வெறுப்பதும் இயல்பு.

தலை முன்னும் வால் பின்னுமாக வளைக்குள் புகுந்து வால் முன்னும் தலை பின்னுமாக மடங்கி நிற்கும் பாம்புபோல, கடை முதலும் முதல் கடையுமாக மாறிநின்றும் பொருள்படக்கூடிய சொன்முறை, அளைமறிபாம்பு எனப்படும்.

அளை - வளை. மறிதல் - மடங்குதல்.

எ-டு : (1) குத்தினான் வேங்கையைக் கத்தியால்.

(2) எடுத்தான் தடியைப் பெருமாள்; அடித்தான் புலியை அவனே.

வை, கத்தியால் வேங்கையைக் குத்தினான், பெருமாள் தடியை எடுத்தான்; அவனே புலியை அடித்தான், என்று கடை தலையாக மாறியும் பொருள்படுதல் காண்க.

ம்

இங்ஙனம் அமைப்பது இயற்கையன்மையாலும், கருத்து மாற்றத்தை யுண்டுபண்ணுவதாலும், நெடுகலும் இம் முறையைக் கையாளுவது வழுவாகும். வலிகருதிய டத்தில்மட்டும்

கையாளலாம்.

சொற்கிடக்கை முறைக்கு

லக்கணத்தில் பொருள்கோள்

என்று பெயர். பொருள்கொள்ளும் முறை பொருள்கோள்.

வினா மரபு

ஒரு பொருளைப்பற்றி வினவும்போது, வினவப்படும் பொருளைக் குறிக்கும் சொல்லின் ஈற்றில் வினாவெழுத்திருத்தல் வேண்டும்.