உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

வினா

எ-டு : கண்ணானா வந்தான்?

கண்ணன் நேற்றா வந்தான்?

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

வினவப்படும் பொருள்

ஆள்

காலம்

கண்ணன் நேற்று என்னிடமா

வந்தான்?

இடம்

கண்ணன் நேற்று என்னிடம்

வண்டியிலா வந்தான்?

ஊர்தி

கண்ணன் நேற்று என்னிடம்

வேகமாகவா வந்தான்?

வந்தவகை

கண்ணன் நேற்று என்னிடம்

புத்தகமா தந்தான்?

பொருள்

ஐயமும் சினமும் பற்றிய வினாவில், சிறிதறியப்பட்ட பொருளும் உண்மைப் பொருளும் முன்னர்க் கூறப்படல் வேண்டும்.

எ-டு : அவ் வுருவம் மாந்தனா? மரமா? - ஐயவினா. நீ மனிதனா? மாடா? - சின வினா.

ஒரு வினாவில், உடன்பாட்டுச் சொல்லும் எதிர்மறைச் சொல்லும் அல்லது நன்மைச் சொல்லும் தீமைச்சொல்லும் அடுத்துவரின், பொதுவாய் உடன்பாட்டுச் சொல்லும் நன்மைச் சொல்லும் முன்னர்க் கூறப்படும்.

எ-டு : தமிழ்நாட்டிற்கு இந்தி வேண்டுமா? வேண்டாவா? எந்திரத்தினால் நன்மையா? தீமையா?

வினவுவான் கருத்தின்படி, எதிர்மறைச்சொல்லும் தீமைச் சொல்லும் உண்மை குறிப்பின், அவை முன்வரலாம்.

எ-டு : உனக்குத் தண்டனை வேண்டாவா? வேண்டுமா? குடியினால் தீமையா? நன்மையா?

குறித்த கருத்தின்றிக் கேட்கப்பெறும் வினாக்களிலெல்லாம், எதிர்மறைச் சொல்லும் தீமைச்சொல்லும், உண்மை குறிக்கும் போதுகூட, பின்வருவதே இயல்பாம்.

எ-டு : ஆள் வரி (poll-tax) விதிக்கலாமா? விதிக்கக்கூடாதா?

சூதாட்டம் நல்லதா? கெட்டதா?

மூவிடப் பதிற்பெயர்களையும் சேர்த்துக் கூறும்போது, முன்னிலைப் பெயரை முதலிலும் தன்மைப் பெயரை இடை டை யிலும் படர்க்கைப் பெயரை இறுதியிலும் கூறுவது நன்று.