உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

எ-டு : நீயும் நானும்

நீயும் நானும் அவனும்

63

தன்மைப் பெயரை முதலிற் கூறுவது மரபல்லாமை மட்டுமன்று; தற்புகழ்ச்சி அல்லது அகங்காரமுமாகும்.

ஒரு சொல் முன்நிற்கும்போது இரட்டுறலையோ மயக்கத் தையோ விளைக்குமாயின், அதைப் பின்நிறுத்தல் வேண்டும்.

எ-டு: ஆடு எருமை மாடு என்னுமிவற்றின் நிரை முந்நிரை எனப்படும்.

இதை, ஆடு மாடு எருமை என்னுமிவற்றின் நிரை முந்நிரை எனப்படும் என மாற்றுக.

பயனிலை, முற்றுப் பயனிலை

எச்சப்பயனிலை என

ருவகைப்படும் என்பது, முற்றுப்பயனிலை எச்சப்பயனிலை எனப் பயனிலை இருவகைப்படும் என்றிருத்தல் நல்லது. அமங்கலச் சொல்லை ஒருவரது பெயரொட்ட நிறுத்துதல் கூடாது.

எ-டு : பண்டித நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், மரணத்தின்பின் மாந்தன் நிலையைப்பற்றி மிக அருமை யாகப்

பேசினார்கள்.

நாட்டார் அவர்கள் காலஞ்சென்றுவிட்டதனால் இவ் வாக்கியத்தில் அமங்கலக் குற்றத்திற்கு இடமில்லை. ஆனால், இன்றும் உயிர் வாழ்பவருடைய பெயரையொட்ட அமங்கலச் சொல்லை நிறுத்துதல் கூடாது.

'மரணத்தின் பின் மாந்தன் நிலை' என்னும் நூலின் ஆசிரியர் மறைமலையடிகள் என்று, இயற்பெயரை அமங்கலச் சொற்குப் பின் நிறுத்துதல் வேண்டும்.

ஆங்கிலக் கலைப்பட்டங்களைப் பெயரொடு சேர்த்துக் கூறும்போது, அவர்கள் என்னும் உயர்வுச் சொல்லின்பின் அவற்றை நிறுத்துதல் வேண்டும்.

எ-டு : செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள், பி.ஏ., பி.எல்.

அவர்கள் என்னும் சொல் வராதபோது, கலைப்பட்டங்கள் இயற்பெயரை அடுத்துநிற்கும்.

கனம் லீத்து, எம்.ஏ.