உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

9. வேற்றுமைப் பொருத்தம்

(Appropriate post-positions)

வேற்றுமைத் தொடர்மொழிகளிற் பல, தொகைநிலைத்

தொடர்களாகவே

வழங்குகின்றன.

வழங்குதல்வேண்டும்.

அவற்றை அங்ஙனமே

எ-டு : பால் குடிக்கிற பிள்ளை, காய்ச்சல் மருந்து, சாத்தன் புத்தகம், தம்பி மகன், மலைவாழ்நர்.

இவற்றைப் பொதுவாய் உருபு விரிக்கவேண்டியதில்லை. ஆனால், ஒரு பயன் நோக்கிச் சிலவிடத்து விரிக்கலாம். கூலிவேலை என்பது வேலையின் வகையையும், கூலிக்கு வேலை என்பது வேலையின் நோக்கத்தையும் குறிக்கின்றது. பால் குடிக்கிற பூனை என்பது பொதுவாகப் பால் குடிக்கும் பூனையையும், பாலைக் குடிக்கிற பூனை என்பது பாலைக் களவிற் குடிக்கும் பூனையையும் உணர்த்தும். இங்ஙனமே,சோறுண்கிறான் என்பது பொதுவான பொருளிலும், சோற்றை யுண்கிறான் என்பது குறிப்பிட்ட சோற்றையுண்கிறான் என்னும் சிறப்புப் பொருளிலும் வழங்கலாம்.

வேற்றுமையுருபுகளைச் சிலவிடத்து விரித்தே வழங்குதல் கூடும். அவனைக் கூப்பிடு என்பதை அவன் கூப்பிடு என்றும், மரத்திலிருந்து விழுகிறது என்பதை மரம் விழுகிறது என்றும் சொல்லமுடியாது.

வேற்றுமையுருபுகளைப் பெயரொடு சேர்க்கும்போது, அவ்வப் பொருட்குரியவற்றையே சேர்த்தல்வேண்டும். உருபு மாறின் பொருளும் மாறிவிடும்; அல்லது பொருள இராது.

தலைவலிக்கிறது என்பது நெற்றி முழுதும் வலிக்கிறது என்றும், தலையில் வலிக்கிறது என்பது தலையில் ஏதோ ஒரு பகுதி வலிக்கிறது என்றும், பொருள்படும். கல்லை யெறிந்தான் என்பது குறியில்லாமற் கல்லையெறிவதையும், கல்லால் எறிந்தான் என்பது குறிமேற் கல்லையெறிவதையும் குறிக்கும். தொழிலைப் பயில்கிறான் என்பது ஒரு குறித்த தொழிலைக் கற்றலையும், தொழிலிற் பயில்கிறான் என்பது ஒரு குறித்த தொழிலிற் பழகுதலையும், உணர்த்தும். இங்ஙனமே பிறவும்.

பல பொருளுக்குப் பல வேற்றுமையுருபுகள் ஏற்கும். அவற்றுள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால், செய்யுள் வழக்கைவிட உலக வழக்கையும், உலக வழக்கிலும் பெருவழக்கையும், தழுவுதல் நன்று.