உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

65

சில பொருட்கு உருபுமட்டும் வரும்; சில பொருட்கு உருபுஞ் சொல்லும் வரும்.

சார்பு : கருமச் சார்பு கருமமல்லாச் சார்பு எனச் சார்பு இருவகைப்படும். உடம்பால் தொடுதல் கருமச்சார்பு; உதவியை நாடல் கருமமல்லாச் சார்பு. இவ்விரு பொருளிலும் 2ஆம் வேற்றுமையும் 7ஆம் வேற்றுமையும் வரும்.

எ-டு : தூணைச் சார்ந்தான், தூணின்கட் சார்ந்தான், தூண்மேற் சாய்ந்தான்

அரசனைச் சார்ந்தான், அரசன்கட் சார்ந்தான்,

அரசனிடம் சார்ந்தான்

- கருமச் சார்பு

கருமமல்லாச்சார்பு

சேர்வு : சேர்வுப்பொருட்கு 2ஆம் வே.-யும் 3ஆம் வே.-யும் வரும்; அல்லது, 3ஆம் வே-யும் 7-ஆம் வே.-யும் வரும்.

வரும்.

எ-டு : முசலொனி இற்றிலரைச் சேர்ந்தவர், முசலொனி இற்றில ரோடு சேர்ந்தவர்.

குடும்பத்தொடு சேர்ந்துகொண்டான், குடும்பத்தில் சேர்ந்து கொண்டான்.

நீங்கல்: 2ஆம் வே.-யும் 4-ஆம் வே.-யும் 5-ஆம் வே-யும் வரும். எ-டு : ஊரை நீங்கினான், ஊரைவிட்டு நீங்கினான்.

ஊருக்கு நீங்கினான் (செ.)

ஊரின் நீங்கினான், ஊரினின்று நீங்கினான்.

ஒப்பு: 2ஆம் வே.-யும், 4ஆம் வே-யும்.

எ-டு : அதையொத்தது

அதற்கொத்தது

ஒப்பீடு: 2ஆம் வே.-யும், 4ஆம் வே-யும், 5ஆம் வே-யும்.

எ-டு : சாத்தனைவிட நெடியன்

சாத்தற்கு நெடியன்

சாத்தனின் நெடியன், சாத்தனில் நெடியன், சாத்தனிலும் நெடியன்.

எல்லை அல்லது திசை: 4ஆம் வே.-யும், 5ஆம் வே.-யும்

எ-டு : மதுரைக்கு வடக்குத் தில்லை.

மதுரையில் வடக்குத் தில்லை.

தொலைவு : 4ஆம் வே.-யும் 5ஆம் வே.-யும் வரும்.