உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

வரும்.

சென்னைக்குத் தில்லி (Delhi) தொலைவு. சென்னையிலிருந்து தில்லி தொலைவு.

கருவி அல்லது காரணம் : 3ஆம் வே.-யும், 5ஆம் வே.-யும்

எ-டு : மண்ணாற் செய்த குடம், வாணிகத்தால் முன்னேறினான்.

மண்ணிற் செய்த குடம், வாணிகத்தின் முன்னேறினான். பொருட்டு: 3ஆம் வே.-யும், 4ஆம் வே.-யும் வரும்.

எ-டு : இப் பிள்ளையினால் உயிர் வாழ்கிறேன்.

இப் பிள்ளைக்காக உயிர் வாழ்கிறேன், இப் பிள்ளையின் பொருட்டு உயிர் வாழ்கிறேன்.

அச்சம் : 2ஆம் வே-யும் 4ஆம் வே.-யும் 5ஆம் வே.-யும் வரும்.

எ-டு : பழியை அஞ்சுவேன். (செ.)

பழிக்கு அஞ்சுவேன்.

பழியின் அஞ்சுவேன். (செ.)

செய்யுள் வழக்கில், 5ஆம் வேற்றுமைக் கொப்பாகப் பழியால் அஞ்சுவேன் என 3ஆம் வேற்றுமையும் வரும்.

வரும்.

சிறப்பு அல்லது தலைமை : 4ஆம் வே.-யும் 7ஆம் வே.-யும்

எ-டு : பூவிற்குச் சிறந்தது தாமரை, காவியத்திற்குச் சிறந்தது சிலப்பதிகாரம்.

பூவிற் சிறந்தது தாமரை, காவியத்திற் சிறந்தது சிலப்பதிகாரம்.

உரிமை : 4ஆம் வே.-யும், 6ஆம் வே.-யும் வரும்.

எ-டு : தேவர்க்குப் பலி.

தேவரது பலி.

பெயராய் வரும்போது தேவர்பலி எனத் தொகையாய் இருத்தலே நன்று.

னமுறை : 4ஆம் வே.-யும் 6-ஆம் வே.-யும் வரும்.

எ-டு : கண்ணனுக்குத் தம்பி, நம்பிக்கு மகன்.

கண்ணனுடைய தம்பி, நம்பியின் மகன்.

பெயராய் வரும்போது, கண்ணன் தம்பி, நம்பிமகன் எனத் தொகையாயிருத்தலே நன்று.