உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

பொருட்பாடு : 4ஆம் வே.-யும், 6ஆம் வே.-யும் வரும். எ-டு : இச் சொற்குப் பொருளென்ன?

இச் சொல்லின் பொருளென்ன?

பொருளில்வரல் : 4ஆம் வே.-யும் 7ஆம் வே.-யும் வரும். எ-டு : அச்சப் பொருட்கு எந்த வேற்றுமை வரும்? அச்சப் பொருளில் எந்த வேற்றுமை வரும்?

பெயரிலிருத்தல் : 4ஆம் வே.-யும், 7ஆம் வே.-யும் வரும். எ-டு : இந்த ஆவணம் (பத்திரம்) யார் பேருக்கு இருக்கின்றது? இந்த ஆவணம் யார் பேரில் இருக்கின்றது?

67

ஐயம் : 2ஆம் வே.-யும், 4ஆம் வே.-யும் 7ஆம் வே.-யும் வரும். எ-டு : அதைப்பற்றி ஐயமில்லை.

அதற்கு ஐயமில்லை.

அதில் ஐயமில்லை.

பருவம்: 3ஆம் வே.-யும், 7ஆம் வே.-யும் வரும்.

எ-டு : ஆண்டால் மூத்தவன், அறிவால் மூத்தவன். ஆண்டில் மூத்தவன், அறிவில் மூத்தவன். ஆண்டால் இளைஞன், அறிவால் இளைஞன். ஆண்டில் இளைஞன், அறிவில் இளைஞன்.

இப் பொருளில் 7ஆம் வே. வருவதே சிறப்பாம். செலவு: 2ஆம் வே-யும் 7ஆம் வே-யும் வரும். எ-டு : வழியைச் சென்றான், நெறியைச் சென்றான் (செ.)

வழியிற் சென்றான், நெறியிற் சென்றான், நெறிக்கண் சென்றான்.

ஆற்றிலடியுண்டு போதற்பொருளில் 3ஆம் வே.-யும் 7ஆம் வே.-

யும் வரும்.

எ-டு : ஆற்றோடு போய்விட்டான், வெள்ளத்தோடு போய்விட்டான். ஆற்றிலே போய்விட்டான், வெள்ளத்திலே போய்விட்டான்.

நோயாலிறத்தலைக் குறிக்க 7ஆம் வே. வரும்.

எ-டு : காய்ச்சலிற் போய்விட்டான், கொள்ளையிலே போக.

வெற்றி : 2ஆம் வே.-யும் 7ஆம் வே-யும் வரும்.

எ-டு : போரை வென்றான்.

போரில் வென்றான்.