தொடரியல்
65
சில பொருட்கு உருபுமட்டும் வரும்; சில பொருட்கு உருபுஞ் சொல்லும் வரும்.
சார்பு : கருமச் சார்பு கருமமல்லாச் சார்பு எனச் சார்பு இருவகைப்படும். உடம்பால் தொடுதல் கருமச்சார்பு; உதவியை நாடல் கருமமல்லாச் சார்பு. இவ்விரு பொருளிலும் 2ஆம் வேற்றுமையும் 7ஆம் வேற்றுமையும் வரும்.
எ-டு : தூணைச் சார்ந்தான், தூணின்கட் சார்ந்தான், தூண்மேற் சாய்ந்தான்
அரசனைச் சார்ந்தான், அரசன்கட் சார்ந்தான்,
அரசனிடம் சார்ந்தான்
- கருமச் சார்பு
கருமமல்லாச்சார்பு
சேர்வு : சேர்வுப்பொருட்கு 2ஆம் வே.-யும் 3ஆம் வே.-யும் வரும்; அல்லது, 3ஆம் வே-யும் 7-ஆம் வே.-யும் வரும்.
வரும்.
எ-டு : முசலொனி இற்றிலரைச் சேர்ந்தவர், முசலொனி இற்றில ரோடு சேர்ந்தவர்.
குடும்பத்தொடு சேர்ந்துகொண்டான், குடும்பத்தில் சேர்ந்து கொண்டான்.
நீங்கல்: 2ஆம் வே.-யும் 4-ஆம் வே.-யும் 5-ஆம் வே-யும் வரும். எ-டு : ஊரை நீங்கினான், ஊரைவிட்டு நீங்கினான்.
ஊருக்கு நீங்கினான் (செ.)
ஊரின் நீங்கினான், ஊரினின்று நீங்கினான்.
ஒப்பு: 2ஆம் வே.-யும், 4ஆம் வே-யும்.
எ-டு : அதையொத்தது
அதற்கொத்தது
ஒப்பீடு: 2ஆம் வே.-யும், 4ஆம் வே-யும், 5ஆம் வே-யும்.
எ-டு : சாத்தனைவிட நெடியன்
சாத்தற்கு நெடியன்
சாத்தனின் நெடியன், சாத்தனில் நெடியன், சாத்தனிலும் நெடியன்.
எல்லை அல்லது திசை: 4ஆம் வே.-யும், 5ஆம் வே.-யும்
எ-டு : மதுரைக்கு வடக்குத் தில்லை.
மதுரையில் வடக்குத் தில்லை.
தொலைவு : 4ஆம் வே.-யும் 5ஆம் வே.-யும் வரும்.