உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

எனக்கும் அவருக்கும் தொடர்புண்டு. எனக்கு அவரொடு தொடர்புண்டு. எனக்கு அவருடைய தொடர்புண்டு. எனக்கு அவன் நட்பு.

எனக்கும் அவனுக்கும் நட்பு, நட்புண்டு. எனக்கு அவனொடு நட்பு, நட்புண்டு.

எனக்கு அவனுடைய நட்புண்டு.

எனக்கு அவன் பகை.

எனக்கும் அவனுக்கும் பகை, பகையுண்டு. எனக்கு அவனொடு பகை, பகையுண்டு.

எனக்கு அவனுடைய பகையுண்டு.

69

குறிப்பு : நட்பும் பகையும் குறித்து 4ஆம் வேற்றுமையும் 6ஆம் வேற்றுமையும் வரும் வாக்கியங்கள், கூறுவான் குறிப்பின்படி, ஒருதலை நட்பு பகையையும் உணர்த்தலாம்.

எ-டு : எனக்கு அவனுடைய நட்புண்டு = அவன் என்னிடத்து அன்பு

பூண்டிருக்கின்றான்; ஆனால், யான் அவனிடத்து அன்பு பூணவில்லை.

அங்ஙனமே பிறிதும்.

ஒரு பொருளின் பகுதியைக் குறித்தலைக் கூறும் கூற்றில், முதற்பெயர் 6ஆம் வேற்றுமையுருபையேற்றால் சினைப்பெயர் 2ஆம் வேற்றுமையுருபையேற்கும்; முதற்பெயர் 2ஆம் வேற்றுமை யுருபை யேற்றால் சினைப்பெயர் 7ஆம் வேற்றுமையுருபை யேற்கும்.

எ-டு : யானையின் காலை வெட்டினான். யானையைக் காலின்கண் வெட்டினான். குடத்தின் விளிம்பைக் குறைத்தான். குடத்தை விளிம்பின்கண் குறைத்தான்.

10. இசைபு (Concord or Agreement)

தழுவுஞ்சொல்லும் தழுவப்படும் சொல்லும், திணை பால் எண் இடங்களில் ஒத்திருத்தல் இசைபு ஆகும்.

ஈரெச்ச முடிபு

பெயரெச்சமும் வினையெச்சமும், இருதிணை ஐம்பால்

மூவிடங்கட்கும் பொதுவாம்.