உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

பெயரெச்சம்

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : வந்த - யான் (நான்), யாம், யாங்கள், நாம், நாங்கள் வந்த – நீ, நீர் (நீயிர், நீவிர்), நீம், நீங்கள்

வினையெச்சம்

வந்த - அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை யான்(நான்), யாம், யாங்கள், நாம், நாங்கள் - வந்த (காலம்) நீ, நீர், நீம், நீங்கள் - வந்த (காலம்)

அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை - வந்த (காலம்)

வந்து போனேன், போனோம் -

வந்து போனாய், போனீர், போனீர்கள்

வந்து - போனான், போனாள், போனார், போனார்கள், போனது, போயின.

யான் (நான்), யாம், யாங்கள், நாம், நாங்கள் - வந்து

-

நீ, நீர், நீங்கள் வந்து

-

அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை வந்து குறிப்பு :

ப்

(1) ஒரு ரு ரு இரண்டு மூன்று சில பல முதலிய எண்ணுப் பெயரெச்சங்கள் அஃறிணையீறு கொண்டுள்ளமையால் உயர்திணைப் பெயர்களைத் தழுவா வென்றும், இரு மக்கள் சில மாணவர் என்று கூறாமல் இருவர் மக்கள் சிலர் மாணவர் அல்லது மக்கள் இருவர் மாணவர் சிலர் என்று கூறுதல் வேண்டுமென்றும், சில அறிஞர் கருதுவர். பெயரெச்ச ஈறுகள் திணைபால் காட்டாமை யாலும், கிழமை வேற்றுமைப் பெயரெச்சமொழிந்த எல்லாப் பெயரெச்சங்களும் இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாகையாலும், இறந்தகால நிகழ்காலப் பெயரெச்சங்களும் பல குறிப்புப் பெயரெச்சங்களும் அகரவீறு கொண்டுள்ளமை யாலும், எண்ணுப் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்ச வகையாத லாலும், இரு மக்கள், இரண்டுபேர், மூன்று மாணவர், மாணவர்,மூவாசிரியர், சிலமாந்தர் என்று கூறுவதெல்லாம் வழுவல்ல என்றறிக.

(2) ஒரு இரு முதலிய சொற்களும், சில் பல் என்னும் சொற்களும், எப்போதும் பெயரெச்சமாகவே யிருக்கும். இரண்டு மூன்று முதலிய சொற்களும், சில பல என்னும் சொற்களும், பெயராகவும் பெயரெச்சமாகவும் இருக்கும். ஒன்று என்னும் சொல், என்றும் பெயராகவே யிருக்கும்.