உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

85

ஆண் பெண் என்னும் அடையடுத்துப் பிள்ளை என்னும் பெயர் பெரிய ஆளைக் குறிப்பின், பாலுக்கேற்ப ஆண்பால் அல்லது பெண்பால் வினைகொண்டு முடியும்.

எ-டு : ஆண்பிள்ளை வருகிறான் - ஆண்பால்

பெண்பிள்ளை வருகிறாள்

பெண்பால்

அம்மான்சேய் என்னும் பெயர், ஆண்பால் வினைகொண்டு

முடியும்.

எ-டு : அம்மான்சேய் வருகிறான்.

உயர்வுப்பன்மை

வினைகொண்டு முடிக்க விரும்பின்,

பெயரையும் உயர்வுப் பன்மையாக்குதல் வேண்டும்.

எ-டு : அம்மான்சேயார் வருகிறார்.

தலைச்சன் இடைச்சன் கடைச்சன் கடைக்குட்டி என்னும் பெயர்கள், குழந்தையைக் குறிப்பின் பருவத்திற்கேற்ப ஒன்றன்பாற் சொல் கொண்டும், பெரிய ஆளைக் குறிப்பின் பாலுக்கேற்ப ஆண்பால் அல்லது பெண்பாற் சொல் கொண்டும் முடியும்.

எ-டு : தலைச்சன் இது, தலைச்சன் வருகிறது தலைச்சன் இவன், தலைச்சன் வருகிறான் தலைச்சன் இவள், தலைச்சன் வருகிறாள் கடைக்குட்டி இது, கடைக்குட்டி வருகிறது

கடைக்குட்டி இவன், கடைக்குட்டி வருகிறான் கடைக்குட்டி இவள், கடைக்குட்டி வருகிறாள்

-இருபாற்பொது - ஆண்பால் பெண்பால் -இருபாற்பொது

-

ஆண்பால் -பெண்பால்

உயர்வுப் பன்மையாயின், தலைச்சனார் இவர், கடைக்

குட்டியார் இவர், என வரும்.

இது தலைச்சன், இவன் தலைச்சன்; இது கடைக்குட்டி, இவன் கடைக்குட்டி எனச் சுட்டுப் பெயரைப் பயனிலையாக்கிக் கூறினும், முடிபொன்றே.

ஆள் என்னும் பெயர் முடிபு

ஆள் என்னும் பெயர், பாலறியப்படாவிடத்து உயர்வுப் பன்மை வினைகொண்டும், பாலறியப்பட்ட விடத்துப் பாலுக்கேற்ப ஆண்பால் அல்லது பெண்பால் வினைகொண்டும், சொல்லுவான் கருத்திற்கேற்ப உயர்வுப்பன்மை வினை கொண்டும், முடியும்.