உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மரபியல்

(IDIOMS AND USAGES)

1. வழக்கியல் வகை

சொற்களும் சொற்றொடர்களும் வழங்கிவருவது வழக்கு. அது, இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருபாற்படும்.

இயல்பு வழக்கு

1. இலக்கணமுடையது,

2. இலக்கணப்போலி,

3. மரூஉ.

என மூவகைப்படும்.

இலக்கணந் தவறாத சொல்லும் சொற்றொடரும் இலக்கண முடைய (இலக்கண) வழக்காம்.

எ-டு. யானை,யானை மலையில் வாழும்.

இலக்கணம் சிறிது தவறியும் இலக்கணமுடையது போல வழங் கும் சொல்லும் சொற்றொடரும், இலக்கணப் போலி வழக்காம்.

எ-டு. விசிறி - சிவிறி (எழுத்துமுறை மாற்று)

கோவில் - கோயில் (உடம்படுமெ-ம் மாற்று)

நகர்ப்புறம் - புறநகர் (சொன்முறை மாற்று)

சொற்களும் சொற்றொடரும் மருவி வழங்குவது மரூஉ வழக்காம். மருவுதலாவது சிதைதல் அல்லது குறுகுதல்.

எ-டு. வாழ்நன் – வாணன்.

திருச்சிராப்பள்ளி - திருச்சி.