உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

தகுதி வழக்கு

இடக்கரடக்கல்,

1.

2.

மங்கலம்,

3.

குழூஉக்குறி.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

என மூவகைப்படும்.

அவையில் சொல்லத்தகாத இடக்கரான பொருளை அல்லது கருத்தை அடக்கி (அஃதாவது மறைத்து)ச் சொல்வது, இடக்கரடக்கல் வழக்காம்.

எ-டு. 'பன்றியொடு சேர்ந்த கன்றும் பவ்வீ தின்னும்.'

அமங்கலமான கருத்தை மங்கலச் சொல்லாலும் சொற்றொட ராலும் குறிப்பது, மங்கல வழக்காம்.

எ-டு. துஞ்சினான்

இறைவன் திருவடி நிழலடைந்தான்

இயற்கை யெ-தினான்

திருநாடலங்கரித்தான்

பெரும்பிறிது (சாவு) உற்றான்

(செத்தான்)

பிறர்க்குப் புலனாகாதவாறு, ஒரு குழுவார் ஒரு குழுவார் மட்டும் தமக்குள் மறைபொருளவாக வழங்கும் குறிகள் அல்லது சொற்கள், குழூஉக் குறியாம்.

எ-டு. கருந்தலை (1/4)

இருகுரங்குக்கை (முசுமுசுக்கை)

குறிப்பு: ஒரு நாட்டில் ஒரு பகுதிக்கே சிறப்பாயுரிய திசை வழக்கையும், உயர்ந்தோரல்லாதார் வழங்கும் இழிவழக்கையும், அயன் மொழி தழுவிய அயல்வழக்கையும், கட்டுரைகளிலும் நூல்களிலும் வழங்குதல் கூடாது.

திசை வழக்கு

எ-டு: தஞ்சை

வடார்க்காடு

கோவை

கெட்டுப் போயிற்று தாரைவார்ந்து போயிற்று

கூடப்போயிற்று (காணாமற் போயிற்று)

திசைவழக்கு, அவ்வவ் விடத்திற்கு ஏற்கும்; நாடு முழுமைக்கும்

ஏற்காது.