உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

(5) நன்னடை (Good Style)

117

ஒவ்வொரு வரைவாளரும், தம்தம் திறமைக்கேற்ற இயல்பான நடையில் எழுத்துப்பிழை, சொற்பிழை, புணர்ச்சிப்பிழை, வாக்கியப் பிழை, பொருட்பிழை, மரபுப்பிழை ஆகிய அறுவகைப் பிழை களுமின்றி, இலக்கண நடையா- வரைதல் வேண்டும்.

ஒரு மாணவன் தன் சொல்லறிவிற் கேற்றபடி, எளிய சொற் களையும் சொற்றொடர்களையுமாவது, உயர்ந்த சொற்களையும் சொற் றொடர்களையுமாவது அமைத்தெழுதலாம். ஆயின், இலக்கணப் பிழை எதுவுமிருத்தல் கூடாது. ஆகவே, சொன்னடை பலதிறப் படினும், லக்கணநடை அவை யெல்லாவற்றிற்கும் இன்றியமை யாதது என்பதை, நினைவிலிருத்துதல் வேண்டும்.

உயர்ந்த சொன்னடை என்பது, 'ஆண் யானை கத்தினது' என்பதை 'களிறு பிளிறினது' என்று கூறும் தகுந்த சொன்னடையே யன்றி, 'யானை சென்றது' என்பதை 'வேழம் படர்ந்தது' என்று கூறும் அருஞ்சொல் நடையன்று.

உயர்நடை

எல்லார்க்கும் இயல்பா அமையாமையானும், பெரும்பாலும் அறிஞரைப் பின்பற்றிப் பயில்வதாலேயே பலர்க்கு உயர்நடை அமைவதானும், நடையிற் பிறரைப் பின்பற்றிப் பயிலுந் திறம் கடியப்படுவதன்று. ஆயின், பின்பற்றப்படுவார் இலக்கண அறிவில் உயர்ந்தாராயிருத்தல் வேண்டும். திருமிகு மறைமலையடிகள், திருவாளன்மார் கலியாணசுந்தர முதலியார், கதிரேசங் செட்டியார், வேங்கடசாமி நாட்டார், ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, மகிழ்நனார் (க, ப, சந்தோஷம்), சேதுப்பிள்ளை, ஜெகவீரபாண்டியனார், டாக்டர் மு. வரதராசனார் முதலியோர் நடைகளை மாணவர் பின்பற்றுவது நன்று.

பிறர் நடையைப் பின்பற்றுதலாவது, அவர் நடையைப் பன் முறை படித்தும் வரைந்தும் பயின்று அதைத் தன்னடையாக்கிக் கொள்வதல்லது, அவர் எழுதியதில் ஒரு பகுதியை உருப்போட்டுக் கொள்வதன்று. 'காக்கை அன்னநடை நடக்கப்போ-த் தன்னடையுங் கெட்டது போல', பிறர்நடையைப் பின்பற்றும் திறமையில்லாதார் பிறர் நடையைப் பின்பற்றின், தன்நடையுங் கெடுவரென்பது திண்ணம்.