உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கட்டுரைகளை, தரம்பற்றி (1) அறிஞர் கட்டுரை அல்லது அறிவுக் கட்டுரை என்றும், (2) மாணவர் கட்டுரை அல்லது பயிற்சிக் கட்டுரை என்றும், இரு திறமா-ப் பகுக்கலாம். அறிஞர் கட்டுரை நூறு பக்கமும் அதற்கு மேலும் நீண்டிருக்கலாமெனினும், மாணவர்க்காக எழுதப்படின் முப்பது பக்கத்தின் மிகாதிருத்தல் நல்லது. மாணவர் கட்டுரையோ, என்றும் முப்பக்கத்திற்குட்பட்டே யிருத்தல் வேண்டும்.

ii. சிறந்த கட்டுரையின் கூறுகள்

(1) ஒருமைப்பாடு (Unity)

ஒரு கட்டுரை ஒரே பொருளைப்பற்றியதா யிருத்தல் வேண்டும்; பல பொருள்பற்றியதாயும் மற்றொன்று விரித்தலாயுமிருத்தல் கூடாது. ஒவ்வொரு பாகியும் ஒவ்வொரு கருத்தையே கொண்டிருத்தல் வேண்டும்.

(2) பொருட்பொலிவு

சுருங்கச் சொல்லி விளங்கவைக்கு முறையில், பல சிறந்த கருத்து கள் செறிந்திருப்பது கட்டுரைக்குச் சிறப்பாம். கட்டுரைப் பொருள் சரியாக வரையறுக்கப் பெறுவது (Definition) இன்றியமையாதது.

(3) ஒழுங்கு (Order)

ஒரு

பொருளைப்பற்றிய

கருத்துகளையெல்லாம் முன்பின்

தொடர்பு கெடாதவாறு முறைப்படுத்தி, அம் முறைப்படியே கோவை பட எழுதுவது, பொருள்

உண்டுபண்ணும்.

தெளிவையும் கட்டுரைப் பொலிவையும்

(4) பாகியமைப்பு (Paragraph - Structure)

ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வொரு தனிப்பாகியில் அமைத்து வரைதல் வேண்டும். ஒரு பெருங்கருத்தில் பல உட்கருத்துகளிருக்கு மாயின், அவ் வுட்கருத்துகளையும் வெவ்வேறு வெவ்வேறு பாகியிமைத்தல் வேண்டும். தோற்றப் பொலிவு, படிப்பு வசதி, பொருள் தெளிவு ஆகிய மூன்றும் பாகியமைப்பின் பயனாம்.

குறிப்பு: கல்லூரி மாணவரும், சிலர், பாகியமைப்பின்றிக் கட்டுரை வரைவதால், உயர்நிலைப்பள்ளி வகுப்புகளிலேயே தமிழாசிரியர் இப் பிழையைத் திருத்திவிடல் வேண்டும்.