உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

4. இரு நண்பரிடை நிகழ்வது.

115

அழகப்பன்: வருகிற வேனில் விடுமுறைக்கு எங்கே செல்லலாம்?

முருகையன்: குற்றாலம் செல்லலாமா?

5. தந்தைக்கும் மகனுக்கும் நிகழ்வது.

தந்தை: திருநாவுக்கரசு! நீ கூட இன்றைக்கு வேலை நிறுத்தத்திற் கலந்து கொண்டாயாமே! மெ-தானா?

மகன்: ஆம். அப்பா!

6. இரு மாணவரிடை நிகழ்வது.

மழவரையன்: நீ என்ன விருப்பப்பாடம் எடுத்திருக்கின்றா-?

முனையதரையன்: கணிதம்.

7. கட்டுரை வரைவு (Essay Writing)

i. முன்னுரைக் குறிப்புகள்

கட்டுரை என்பது, உறுதிமொழி, உண்மைக்கூற்று, படைத்து மொழி கிளவி கோப்புரை எனப் பல பொருள் தரும். இங்கு இறுதிப் பொருளில் ஆளப்பெற்றுள்ளது. இப் பொருளில் முதன்முதல் ஆண்டவர் மறைமலையடிகள்.

ஒரு பொருளைப்பற்றிப் பல கருத்துகளை யிசைத்துக் கோவை பட வரையும் சொற்பெருக்கு அல்லது சிறு சுவடி, கட்டுரையாகும். இது எழுதுவாரின் திறமும் நோக்கமும் காலவசதியும்பற்றி, ஒரு பக்கமுள்ள துண்டு வெளியீட்டளவிலிருந்து நூறு பக்கமும் அதற்கு மேலுமுள்ள நூலளவு வரை பல்வேறு அளவுள்ளதா யிருக்கலாம். ஆனால், பொது வா-நூலளவினுங் குறுகிய தாயிருப்பதே கட்டுரை யெனப்படும். நூலுங் குறுகிய அளவுள்ளதாயிருக்கலாம். நூலுக்குங் கட்டுரைக்கும் வேறுபா டென்னையெனின், முன்னதிற்குப் பாலிய பாடுண்மையும் பின்னதிற்கு அஃதின்மையுமாகும்.

பாலியலதிகாரப் பாகுபாடற்ற நீண்ட

லதிகாரப்

பாகு

வரைவுகளெல்லாம்

பொருட்டெளிவும் ஒழுங்குமற் றிருக்குமாதலின், கட்டுரையெனத் தக்கது

மிக நீண்ட அளவின தாயிருத்தல் முடியாது அல்லது கூடாது.