உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

(8) அளவு மிகாமை

119

எந்தக் கட்டுரையும் குறித்த அளவிற்கு மிஞ்சியிருத்தல் கூடாது. அரைத்தாட் பக்கத்தில் (Foolscap size), நடுநிலைப்பள்ளி மாணவர் அரைப் பக்கமும், உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒரு பக்கமும், இடை நடு (Intermediate) மாணவர் இரு பக்கமும், கலையிளைஞன் (B.A.) மாணவரும் அவருக்கு மேற்பட்ட வகுப்பினரும் முப்பக்கமும், வரைதல் வேண்டும் இவ் அளவீடு தேர்வு (பரீட்சை) பற்றிக் குறித்தது. மாணவர் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பொதுவா-க் கட்டுரை வரையும் குறிப்புப் புத்தகம் (Note book) கால் தாள் பக்கங் கொண்ட தாதலின், அதற்குத்தக, மேற்குறித்த அளவை இருடங்காக்கிக் கொள் ளுதல் வேண்டும்.

குறித்த அளவிற்குக் காற்பக்கம் அரைப்பக்கம் கூடினாற் குற்றமின்று. ஆயின் ஒரு பக்கமும் அதற்குமேலும் கூடுதல் கூடாது. குறிப்பு:

(i) தேர்வு வினாத்தாளில் கட்டுரையளவு குறிக்கப்படினும், சில மாண வர் அதைக் கவனியாது பத்துப் பதினைந்து பக்கம் வரை வரைந்து விடுகின்றனர். கீழ்வகுப்புகளிலேயே ஆசிரியர் இதைக் கண்டித்துத் திருத்துதல் வேண்டும்.

(ii) குறித்த அளவிற் சுருக்கியோ விரித்தோ எழுதவிருக்கும் மாணவர், சில சமையங்களில்; குறித்த அளவிற்குப் பொருந்து மாறு, தம் எழுத்தை மொச்சை யெழுத்தாகப் பெரிதாக்கியும் தினை யெழுத்தாக நுணுக்கியும் எழுதுதல் வழக்கம். இது கூடாது. து கூடாது. ஒரு மாணவரின் இயல்பான எழுத்து தினையெழுத்தாகவோ மொச்சை யெழுத்தாகவோ இருப்பினும், ஆசிரியர்க்குத் தெளி வாயிருக்கு மாறும், அளவொடு படுமாறும், இடைத்தரமான பருமனாக எழுதுவதே நல்லது.

பெரிதாகத் தொடங்கி வரவரச் சிறுத்தெழுதுவதும் இறுதிக் கோட் டின்கீழ் எழுதுவதும், வரந்தையில் எழுதுவதும் கூடா. (வரந்தை margin).

(iii) கால்தாட் பக்கமொன்றில் இருபது வரிகள் எழுதலாம். ஒரு வரியில் சராசரி ஐந்து சொற்கள் அமையலாம். ஆகவே, நடு நிலைப்பள்ளி மாணவர் கட்டுரை நூறு சொற்களும், உயர்நிலைப் பள்ளி மாணவர்