உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கட்டுரை இருநூறு சொற்களும், இடைநடு மாணவர் கட்டுரை நானூறு சொற்களும், கலையிளைஞர் அல்லது பட்டத்தேர்வு மாணவர் கட்டுரை அறுநூறு சொற்களும் கொண்டிருக்கலாம்.

(9) முடிவு (Conclusion or Personal Touch)

ஒரு காரியத்தின் விளைவு அல்லது பயன் எவ்வளவு முக்கிய மானதோ, அவ்வளவு முக்கியமானதே ஒரு கட்டுரையின் முடிபும். அதுவே கட்டுரையாளரின் கருத்தாகும். அது ஓர் உண்மைக் கூற்றாக வாவது ஒழுக்க விதியாகவாவது இருக்கலாம்.

ஒரு காரியத்தை அல்லது பொருளைப்பற்றிய பிறர் கருத்துத் தமக்கு உடம்பாடாயின், ஒருவர் பிறர் கருத்தையும் தம் கருத்தாகக் குறிக்கலாம்.

ஒருவர் ஒரு பொருளைப்பற்றித் தாம் கொண்ட கருத்தைக் குறிப் பதே அறநூலுக்கு ஒத்ததாயினும், மாணவர் அரசியற் சட்டதிட்டங் கட்கு உட்பட்டிருத்தலால், முழுப் பேச்செழுத்துரிமை இல்லாதவிடத் தெல்லாம் அரசியற்கு மாறாகத் தாங்கொண்ட கருத்துகளை மாற்றியோ மறைத்தோ எழுதுவதே உலகியலுக் கொத்த தாகும்.

கட்டுரை முடிபின் வடிவு,

(i)

முற்கூறியவற்றின் சுருக்கத் தொகுப்பு,

(ii) மேற்கோள்,

(iii) பழமொழி,

(iv) கட்டுரையாளரின் கருத்துவாக்கியம்

என்னும் நான்கனுள் ஒன்றாயிருக்கலாம்.

(10) கட்டுரைப்பொருள் வன்மைபெறும் வகை

கருத்துச்சிறப்பு, ஏதுவுஞ் சான்றுங் கூறல், பிறன்கோள் மறுப்பு, மேற்கோள் காட்டல், அணியமைவு, எடுத்துக்காட்டுடைமை முதலிய வற்றால், கட்டுரையிற் கூறப்படும் பொருள் வலியுறும்.