உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

121

கட்டுரைப் பகுதிகள்

கட்டுரைகள், பொதுவா-,

(i) முகவுரை (Introduction),

(ii) முக்கியப் பகுதி அல்லது உடல் (Body),

(iii) முடிவு (Conclusion),

என முப்பகுதிகளை யுடைன.

எந்தக் கட்டுரையையும் முகவுரையின்றித் திடுமென்று தொடங்கு வது, முகப்பில்லாத மண்டபம்போல், அத்துணைச் சிறவாது. வரலாற் றுக் கட்டுரைகளிலும், வரணனைக் கட்டுரைகளிலும், இன்னோரன்ன பிறவற்றிலும், முகவுரை யின்றியும் தொடங்கலாம். ஆயினும், அங்கும், ஒரு தொடரளவாகவாவது முகவுரை இருப்பது நன்று. எடுத்துக் காட்டாக, வள்ளுவரைப்பற்றி வரையும்போது, 'உலகம் போற்றும் அறநூலாசிரியரான,' என்னும் தொடர் முகவுரையாக அமையலாம். மேலும், ஓர் ஆளின் பிறப்பு, அல்லது ஒரு பொருளின் தோற்றம், அல்லது ஒரு நிகழ்ச்சியின் அமையம்பற்றித் தொடக்கத்திற் கூறும் பகுதியையும், முகவுரையாகக் கொள்ளலாம். இனிக் கட்டுரைப் பொரு ளின் வரையறையும் முகவுரையா- அமையலாம்.

கட்டுரையின்

உடலானது, முகவுரைக்கும், முடிவுரைக்கும் இடையில், முக்கியப் பகுதியாயும் பேரளவினதாயும் பல கருத்து களைத் தழுவினதாயும் பெரும்பாலும் பல பாகிகளைக் கொண்டதாயு மிருத்தல் வேண்டும்.

முகவுரை, உடல், முடிவு ஆகிய மூன்றும், முறையே, தலையும் உடலும் காலும் (அல்லது வாலும்) போன்றிருத்தலின்; அதற்குத்தக, முகவுரை முடிவுரைகளைச் சுருக்கமாகவும், உடலுரையைப் பெருக்க மாகவும் அமைத்தல் வேண்டும்.

எப்பொருளிலும் முதலும் முடிவும் பெருங் கவனிப்பிற் கிடமா யிருத்தலின், கட்டுரையின் முதல் வாக்கியம் வேட்கையைத் தூண்டுத லாகவும், இறுதிவாக்கியம் அதைத் தீர்த்தலாகவும், இருத்தல் வேண்டும்.