உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(11) கட்டுரை வரைவிற்குக் கவனிக்க வேண்டியவை

மாணவர், கட்டுரை வரைவிற்குக் கவனிக்கவேண்டியவை,

(i) முன்பு செ-வன,

(ii) அன்று செ-வன,

என இருதிறப்படும்.

i. முன்பு செ-வன

(i)

பொருட்சேர்ப்பு,

(ii) பயிற்சி

என இருபாலன.

(1) பொருள் சேர்க்கும் வழிகள்

(i) படித்தல்: ஆசிரியர் வகுப்பில் கட்டுரைக்கு வேண்டிய குறிப்புகள் தரினும், மாணவர் கற்றறிவும் பட்டறிவும் நிரம்பாத வராத லின், கட்டுரைக்கு வேண்டிய பொருளை அல்லது கருத்துகளை, ஏற் கெனவே பல புத்தகங்களையும் செ-தித்தாள்களையும் கட்டுரைத் தொகுதிகளையும் படித்துத் திரட்டி இருத்தல் வேண்டும்.

(ii) கேட்டல்: நூல்களிலும் தாள்களிலும் காணமுடியாத பல செ-திகளை, ஆண்டிலும் அறிவிலும் மூத்த அறிஞர்களை யடுத்துக் கேட்டறிதல் வேண்டும்.

(iii) கவனித்தல்: மேற்கூறிய இரு வழிகளிலும் அறிய முடியாத வற்றை, மாணவர் தாமே கவனித்தறிதல் வேண்டும். கவனிப்புக் கல்விக் கின்றியமையாதது. உலகெங்குங் கற்கப்படும் எல்லா முதல் நூல்களும், பல நுண்மதியர் தாமா-க் கவனித்தறிந் தெழுதியவையே. எழுதப் பட்ட நூலே (அல்லது நூல் என்பதே) இல்லாத காலமும் இருந்தது. அன்றெல்லாம், பல பொருளையும் கவனித்தும் உற்று நோக்கி ஊகித்தறிந்துமே மக்கள் அறிவடைந்தனர். இன்றும் பிறர் கவனியாத அல்லது பிறர் கவனித்துந் தனக்குக் கிட்டாத பல செ-தி களை ஒருவன் தானே கவனித்தறிந்து கொள்ளலாம்.

(2) பயிற்சி

மாணவர் வகுப்பில் எழுதுங் கட்டுரைகள் சிலவும் சில பொருள் பற்றியனவுமே யாதலின், எப்பொருளைப்பற்றியுங் குறித்த நேரத்திற் குள்