உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

123

எழுதி முடித்தற்கு வேண்டும் திறமும் வேகமும் அமைதற் பொருட்டு, வீட்டிலும் பல பொருள்களைப்பற்றி எழுதிப் பயில்வது நல்லது.

ii. அன்று செ-வன

(1) தலைப்பைக் கவனித்தல்

சில மாணவர், சில சமையங்களில், தலைப்பைச் சரியா-க் கவனி யாமலேயே, ஒன்றைப்பற்றிக் கேட்க இன்னொன்றைப்பற்றி எழுதி விடுகின்றனர். மணச் சீர்திருத்தத்தைப்பற்றி யெழுதச் சொன்னால் மனச் சீர்திருத்தத்தைப்பற்றியும், தாகூரைப்பற்றி யெழுதச் சொன்னால் நாகூரைப்பற்றியும், கொல்லாமையைப்பற்றி யெழுதச்

கல்லாமையைப்பற்றியும் எழுதுகின்றனர்.

சொன்னால்

சிலர் தலைப்பின் எழுத்தைக் கவனித்தும் பொருளைக் கவனிப்ப தில்லை. குடியாட்சி என்றால் கட்குடியுள்ள ஆட்சியென்றும், குழவி வளர்ப்பு என்றால் தேனீ (குளவி) வளர்ப்பு என்றும், கல்லாமை யென் றால் கல்லுக்குள்ளிருக்கும் ஆமை என்றும், பிறழ வுணர்ந்து கொள் கின்றனர். இப் பிறழ்வுணர்ச்சிக்கு எண்ணாமையுஞ் சொல்லறியாமை யுங் காரணமாகும்.

ஆகவே, கவனித்தலும், எண்ணுதலும் ஏற்கெனவே சொல்லறிந் திருத்தலும் இருந்தால்தான், தலைப்பைச் சரியா-க் கொள்ள முடியும். (2) தலைப்புக் குறித்தல்

சில கல்லூரி மாணவர்கூடக் கட்டுரைத் தலைப்பைக் குறிப்ப தில்லை. இதைக் கீழ்வகுப்பிலேயே ஆசிரியர் கண்டித்தும் வரையங் (மதிப்பெண்) குறைத்துத் தண்டித்தும் திருத்துதல் வேண்டும்.

(3) தலைப்புப்பொருள் வரையறுத்தல்

ஒரு பொருளைப்பற்றி வரையுமுன் அதன் உண்மையியல்பைத் துணிந்துகொள்ளல் வேண்டும். அல்லாவிடின், மற்றொன்று கூறலாக வே நிகழ்ந்துவிடும். கருத்துத் தெளிவே வரைவுத் தெளிவாதலின், பொருள் வரையறை நற்கட்டுரைக்கு உயிர் நாடியாகும்.

நெருங்கிய அல்லது ஒருபுடையொத்த பொருள்கட் கெல்லாம் வேறுபாடு மாணவர்க்குப் பொதுவா-த் தெரிந்திராதாதலின், ஆசிரியர் அவற்றை அவர்க்கு அறிவுறுத்துதல், வேண்டற்பாலதாம்.

எ-டு. அன்பு x அருள், சிக்கனம் x கஞ்சத்தனம்.