உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

(4) கருத்துக் குறித்தல்

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

மாணவர், தமக்குக் கொடுக்கப்பட்ட பொருளைப்பற்றிய கருத்து களையெல்லாம், முதலில், அவை தமக்குத் தோன்றிய முறைப்படியே விரைந்து குறித்துக் கொள்ளல் வேண்டும்.

(5) கருத்துகளை ஒழுங்குபடுத்தல்

மாணவர், தமக்குத் தோன்றிய கருத்துகளை யெல்லாம் குறித்துக் கொண்ட பின்பு, அவற்றைக் கால முறைப்படியும் ஏரண (logical) முறைப்படியும் ஒழுங்குபடுத்திச் சட்டகம் (outline) அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

கருத்துகளெல்லாம் சமமான பெரும் பிரிவுகளாயின், அவற் றின் ஒழுங்கீடு வெறுஞ் சட்டகம் (Bare outline) ஆகும். அவற்றுட் சில பல பிறவற்றின் உட்பிரிவுகளாயின் நிறைசட்டகம் (full outline) ஆகும்.

கருத்துகளைக்

கோவைப்படுத்தும்போது, வேண்டாதவற்றையும் கூறியது கூறலானவற்றையும், விலக்கிவிடல் வேண்டும்.

குறிப்பு:

(i) கருத்துகளை முதலிலேயே கோவைபடக் குறித்துக்கொள் ளுதற்குப் போதிய காலமும் பெருநினைவாற்றலும் வேண்டுமாதலின், முதலில் அவை தோன்றிய முறைப் படியே குறித்துப் பின்னர் அவற்றை ஏரண முறைப்படுத்து வதே, மேற்கொள்ளத் தக்கதாம்.

(ii) கருத்துகளைக் குறித்துச் சட்டகம் அமைத்தற்கு, உயர் நிலைப்பள்ளி மாணவர் பத்து நிமையங்கட்கு மேலும், கல்லூரி மாணவர் கால்மணிக்கு மேலும் செலவிடல் தகாது. (நிமையம் - minut)

(iii) வகுப்புக் கட்டுரைகட்கெல்லாம் ஆசிரியரே சட்டகக் குறிப்புக் கொடுத்தல் வேண்டும்.

(6) கட்டுரை வரைதல்

சட்டகம் அமைத்தானவுடன், கட்டுரையைத் தொடங்கி முற் கூறிய விதிகளைக் கையாண்டு, பாகியமைப்புடன் பொருத்தவீத மா-க் கோவைபடத் தெளிவாகவுந் திருத்தமாகவுங் குறித்த நேரத் திற்குள் எழுதி முடித்தல் வேண்டும்.