உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(1) கருத்துக் குறிப்பு

ii. நிறைசட்டகம் போலிகை

உணவுப் பங்கீடு

1. எல்லார்க்கும் உணவு கிடைக்கும்.

2. குறைந்த விலைக்கு உணவு கிடைக்கும். 3. பங்கீடு முன்காலத்தி லில்லை.

4. போர்க்காலத்தில் பங்கீடு தோன்றிற்று.

5. பங்கீட்டால் தீமையுண்டு.

6. ஒரு

பொருள் வேண்டியவனுக்குக்

கிடையாமல் வேண்டாத

வனுக்குக் கிடைக்கின்றது.

7. கள்ள விற்பனை மிகுகின்றது.

8. பல நாடுகளில் பங்கீடிருக்கிறது.

9. போர் நின்றும் பங்கீடு நீங்கவில்லை.

10. பங்கீட்டுத்துறை யலுவலாளர்க்கு வேறு வேலை வேண்டும். 11. மக்கட் பெருக்கம்.

12. கள்ள விற்பனையாளருக்குப் பங்கீடு நீக்கம் விருப்பமன்று.

13.முடிபு.

(2) கருத்தொழுங்கீடு

1. பங்கீடென்றால் என்ன?

2. பங்கீட்டுத் தோற்றம்.

3. பங்கீட்டின் நன்மை.

(1)

எல்லார்க்கும் உணவு கிடைத்தல்.

(2) குறைந்த விலைக்கு உணவு கிடைத்தல்.

4. பங்கீட்டின் தீமை

(1) ஒரு பொருள் வேண்டாதவனுக்குக் கிடைத்தலும் வேண்டிய

வனுக்குக் கிடையாமையும்.

(2) கள்ள விற்பனை மிகுதல்.