உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

5. பங்கீடு நீங்காமைக்குக் காரணங்கள்

(1) பங்கீட்டுத்துறை யலுவலாளர்க்கெல்லாம் வேறு வேலையின்மை. (2) மக்கட் பெருக்கம்.

(3) கள்ள விற்பனையாளர்க்குப் பங்கீட்டு நீக்கம் விருப்பமின்மை.

6.முடிபு

127

‘பங்கீடென்றால் என்ன?' என்பது புதிதாகச் சேர்க்கப்பட்டது 3ஆம் 4ஆம் கருத்தின் மறுமுறைக் கூற்று. 8ஆம் கருத்து வேண்டியதன்று. ஆகையால், இவ் விரண்டும் விலக்கப்பட்டன.

கருத்து

கட்டுரைச் சட்டகம் பொதுவா,

1. முகவுரை அல்லது தோற்றுவா-,

2.

வரையறை (Definition),

3.

வரணனை,

4.

எடுத்துக்காட்டு,

5.

முடிபு.

என்னும் ஐந்து குறிப்புகளை யுடைதாயிருக்கலாம்.

கட்டுரை ஓர் இயற்கைப் பொருளைப் பற்றியதாயின்,

(1) வரையறை, (2) கிடைக்குமிடம், (3) வகையும் வரணனையும், (4) எடுக்கும் முறை, (5) பயன், (6) முடிபு எனவும்;

ஒரு செயற்கைப்பொருளைப் பற்றியதாயின்,

(1) வரையறை, (2) வகை, (3) செ-யுமிடம், (4) செ-யும் முறை, (5) பயன், (6) முடிபு எனவும்;

ஓர் உயிரியைப் பற்றியதாயின்.

(1) வரையறை, (2) வாழிடம், (3) வகையும் வரணனையும், (4) பழக்கவழக்கம், (5) பிடிக்கும் முறை, (6) பயன், (7) முடிபு எனவும்;

ஒருவரின் வாழ்க்கை வரலாறாயின்,

(1) பிறப்பு வளர்ப்பு, (2) கல்வி, (3) அலுவல், (4) வாழ்க்கை முறை, (5) அருஞ்செயலும் பொதுநலத்தொண்டும், (6) குணச் சிறப்பு, (7) முடிபு எனவும்;