உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஒரு விழாவைப் பற்றியதாயின்,

(1) தோற்றமும் நோக்கமும், (2) காலமும் இடமும், (3) நடைபெறும் முறை, (4) பயன், (5) முடிபு எனவும்;

ஒரு நிகழ்ச்சியைப் பற்றியதாயின்,

(1) அமையம் (சந்தர்ப்பம்), (2) நிகழ்ச்சி, (3) விளைவு, (4) முடிபு எனவும்;

ஓர் அமைப்பைப் பற்றியதாயின்,

(1) வரையறை, (2) தோற்றம், (3) வளர்ச்சி, (4) வகை, (5) பயன், முடிபு எனவும்;

ஒரு கண்டுபிடிப்பை அல்லது புதுப்புனைவைப்பற்றியதாயின்,

(1) முந்திய கருத்து, (2) முதற் புனைவு, (3) திருத்த வளர்ச்சி, பயன், (5) எதிர்கால வா-ப்பு, (6) முடிபு எனவும்;

சட்டகம் அமையலாம்.

கட்டுரை வகைகள் (Classification of Essays) கட்டுரைகளைப் பின்வருமாறு பத்துவகையா வகுக்கலாம்.

1. வரலாற்றுக்கட்டுரை (Narrative Essay)

(6)

(4)

ஒரு பொருளின் வரலாற்றைக் கூறுவது வரலாற்றுக் கட்டுரை. இது சரித்திரம், வாழ்க்கைவரலாறு, கதை, நிகழ்ச்சி என்னும் நான்கனுள் ஒன்றுபற்றி வரும்.

2. வரணனைக் கட்டுரை (Descriptive Essay)

ஒரு பொருளை வரணிப்பது வரணனைக் கட்டுரை.

3. விளக்கியற் கட்டுரை (Expository Essay)

ஒரு பொருளை விளக்கிக் கூறுவது விளக்கியற் கட்டுரை.

4. சிந்தனைக் கட்டுரை (Reflective Essay)

ஒரு

பொருளைப்பற்றிச்

சிந்தனைக் கட்டுரை.

சிந்தனையில்

5. பாணிப்புக் கட்டுரை (Imaginative Essay)

அமிழ்ந்துரைப்பது

இல்லாத நிலைமையை இருப்பதாகப் பாவிப்பது பாணிப்புக்

கட்டுரை.