உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

6. தருக்கக் கட்டுரை (Argumentative Essay)

129

ஒரு பொருளைத் தருக்க (Debate) முறையிற் கூறுவது தருக்கக்

கட்டுரை.

7. ஆரா-ச்சிக் கட்டுரை (Research Essay)

ஒரு பொருளை ஆரா-ந்து கூறுவது ஆரா-ச்சிக் கட்டுரை.

8. அங்கதக் கட்டுரை (Satirical Essay)

ஒரு பொருளைக் கண்டித்து அல்லது பழித்துக் கூறுவது அங்க தக் கட்டுரை. அது 1. செம்பொருளங்கதம் 2. பழிகரப் பங்கதம் என இருவகைப்படும். வெளிப்படையா-ப் பழிப்பது செம்பொருளங்கதம்; மறைவாப் பழிப்பது பழிகரப் பங்கதம்.

9. புகழ்ச்சிக் கட்டுரை (Commendatory Essay)

ஒரு பொருளைப் புகழ்ந்து கூறுவது புகழ்ச்சிக் கட்டுரை. அது 1. செம்பொருட் புகழ்ச்சி, 2. வஞ்சகப் புகழ்ச்சி என இருவகைப் படும். வெளிப்படையாப் புகழ்வது செம்பொருட் புகழ்ச்சி; மறை வா-ப் புகழ்வது வஞ்சப் புகழ்ச்சி.

10. நோட்டக் கட்டுரை (Critical Essay)

ஒரு பொருளின் குணங்களையுங் குற்றங்களையும் நடுநிலை யா- எடுத்துக் கூறுவது நோட்டக் கட்டுரை.

குறிப்பு: இங்குக் கூறிய வகைகள் ஒன்றையொன்று சற்றுந் தழுவாத படி முற்றும் வேறுபட்டவையல்ல. ஒவ்வோர் இயல்பின் பெரும்பான்மை பற்றி அவை வெவ்வேறு கூறப்பட்டன. ஒரு நுண்ணறிஞன் எந்தப் பொருளையும் இப் பத்து வகையா-ப் பகுத்து வரையலாம்.

போலிகைக்

1. வரலாற்றுக் கட்டுரை

கட்டுரைகள்

ஆபிரகாம் பண்டிதர்

கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளைத் தோற்றுவித்தவரும், ஒப்புயர்வற்ற இசைத்தமி ழாரா-ச்சியாளரும், கருணாமிர்த சாகரம் என்னும் மாபெருந் தமிழிசை நூலின் ஆசிரியருமான, தஞ்சை இராவ் சாகிபு ஆபிரகாம் பண்டிதர், நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்