உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கூற்றத்தைச் சேர்ந்த சாம்பூர் வடகரையில், 2-8-1859-ல், முத்துசாமி யென்பவருக்கு முதற்பிள்ளையாகப் பிறந்தார்.

சாம்பூர்

வடகரையிலிருந்து மூன்று கல் தொலைவிலுள்ள சுரண்டைக் கிறித்தவப் பள்ளியில், அவர் தம் ஐந்தாம் அகவையிற் சேர்க்கப்பெற்று, பதினான்காம் அகவையில் மேல் நான்காம் (upper fourth) வகுப்பில் தேறினார். அக்காலத்திலேயே அவர் ஓவியத்திலும், மிடற்றிசை யென்னும் வா-ப்பாட்டிலும் சிறந்த பயிற்சி பெற்றார். விளையும் பயிர் முளையில் தெரிந்தது. பின்பு 9-6-1874-ல் திண்டுக்கல், ஆசிரியப் பயிற்சிப் பள்ளியிற் சேர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்றார்.

அக்காலை, அவர் கணியம் (சோதிடம்) கின்னரி (fiddle) யிசை, புகைப்படப் பிடிப்பு, கடிகாரம் ஒக்கிடல், புத்தகங் கட்டல், சட்டை தைத்தல் முதலிய கலைகளையும் அறிவு வளர்ச்சிக்கும் பற்றாட் டாகவும் பயின்று வந்தார். இயல்பாக அவருக்கு மருத்துவ நோக் கிருந்ததினால், சமையம் வாக்கும்போதெல்லாம் மூலிகைகள் சேர்ப் பதும் அவர் வழக்கம்.

1876-ல் ஆசிரியப் பயிற்சி முடிந்தவுடன் அவருடைய பல்கலை யறிவு விடாமுயற்சி நுவற்சித்திறன் (போதனாசக்தி) அன்புடைமை முதலிய அருங்குணங்களைக் கண்ட அப் பள்ளி மேலாளரான யார்க் (York) துரை, அவரை அப் பள்ளியிலேயே ஆசிரியராக அமர்த்திக் கொண்டார். பண்டிதரும், துரை எதிர்பார்த்த அளவிற்குமேல், மாண வருடன் அன்பாக அளவளாவியும், இனிய கதைகள் சொல்லி அவர் களை மகிழ்வித்தும், அவர்கட்கு நல்ல அறிவூட்டித் தேர்வுகளிற் சிறப்பாகத் தேறும்படி செ-துவந்தார். அறிவில் மட்டுமன்றி, ஒழுக்கத் திலும் அவர்கட்கு ஆசிரியரா யிருத்தற்பொருட்டு, தம் பிறவிக் குணத்தின்படி, வேளாண்மை இரப்போர்க்கீதல் முதலிய அறங்களை யும் தம் வாழ்க்கையிற் கடைப்பிடித்தார்.

வு நேரத்தையும் ஒழிவு நேரத்தையும் பயன்படுத்துவதிற் பண்டிதர் ஒப்புயர்வற்றவர். சோம்பற்பே அவரருகி லிருப்பவரை யும் விட்டு நீங்கிக் காதவழியோடும். விடுமுறை நாள்களில், சிறப் பாகக் கோடை விடுமுறையில், தக்கோர் நட்பு, கற்றோர் உறவு, துற வோர் அருள் ஆகியவற்றை அருவிலை மாணிக்கம் போல் தேடி வந்தார். ஓ-வு நாள்களான ஞாயிற்றுக்கிழமைகளில் மறையாரா-ச்சி செ-வது