உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

131

அவர் வழக்கம். இங்ஙனம் கடவுளருளையும் பெரியோர் நல்லெண் ணத்தையும் பெறுவதிற் கண்ணுங் கருத்துமா யிருந்து வந்தார்.

1877ஆம் ஆண்டுக் கோடை விடுமுறையில், பண்டிதர், துரைசாமி மாணிக்கவாசகம் என்ற இருமாணவரின் தந்தையாரும் பெருநிலக் கிழவருமான பொன்னம்பலம் என்பவரின் அழைப்பிற்கிணங்கி, யானைமலைப்பட்டி செல்ல நேர்ந்தது. அங்கு அவர் அருகிலுள்ள சுருளிமலை யுச்சியில் யோகு வீற்றிருந்த கருணானந்த முனிவரின் பெருமையைப் பற்றிக் கேள்வியுற்று, அவரைக் காணும் பொருட்டுப் பொன்னம்பலனாருடன் ஒரு நாள் மலையேறிச் சென்றார். அம் மலை குண்டடியானும் சிறுத்தையும் நிறைந்ததாதலின், அவ் விரு வரும் அஞ்சியஞ்சி நின்று நின்று மெல்ல மெல்லச் சென்றனர். அரைமலைத் தொலைவு சென்று அங்கொரு மண்டபத்தில் இருவரும் இளைப் பாறிக் கொண்டிருந்தபோது, முனிவரின் கட்டளைப்படி ஒரு சிவத் துறவியார் வந்து, ஆபிரகாம் என்னும் பெயரினர் யார் என வினவி யறிந்து, அவரை மட்டும் அழைத்துக்கொண்டுபோ- முனிவரின் காட்சி பெறுவித்தனர். பண்டிதர் முனிவரைக் கண்டதும் அவர் திருவடிகளில் விழ, முனிவர் "ஆபிரகரமே! எழுந்திரு," எனப் பணித்து, ஒரு சிறந்த சித்த மருத்துவ முறையை எழுதுவித்து,

"சில ஆண்டின்பின் யாம் பனிமலை (இமயம்) செல்லுங்கால், பொன்னிக்கருகில், தோட்டந் துரவு நிறைந்த மண்மனைகளுடன், மனைமகார் பாங்கிருக்க, உற்றார் உறவினர் புடைசூழ, பெரும்புகழ் வா-ந்த மருத்துவச் சித்தனா- குறைவற்ற செல்வனா-, இரப்போர்க்கு வள்ளலா-, இசைவல்லோர்க் காசிரியனா-, பாரினில் பேரறிஞனா-, நீ இன்புற்று வாழக் காண்பேம்.'

"

என வாழ்த்தியருளி, அதன்பின் வேண்டும்போதெல்லாம் தம்மைத் துணையின்றி வந்து காணவும் அருள்சுரந்தார்.

பண்டிதர், முனிவரிடம் பிரியா விடைபெற்றுத் திண்டுக்கல் வந்து சேர்ந்தவுடன், 'கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்' தோன்றின.

1882-ல், பண்டிதர் கிறித்துமஸ் விடுமுறைக்குச் சாம்பூர் வடகரை சென்றார். 27-12-1882-ல் அவருக்கும் நாஞ்சாங்குளம் வேதக் கண்ணார் மகளார் ஞானவடிவு பொன்னம்மாள் என்னும் அம்மை யாருக்கும்