உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

திருமணம் நடந்தேறியது. விடுமுறை முடிந்தபின், பண்டிதர் தம் இல்லக்கிழத்தியாருடன் திண்டுக்கல் திரும்பினர்.

அவர் வேலை செ-துவந்த பள்ளி, அதை நடத்துதற்கு வேண்டும் பொருளின்மையால், ஒரு மாதத்தில் எடுபட்டுவிட்டது. அதன்பின், அவர் தஞ்சையில் பிளேக் துரையின் கண்காணிப்பி லிருந்த ஒரு பெண்பள்ளியில் தமிழாசிரியரா- அமர்ந்தார். அவர் மனைவியார் அதற்குத் தலைமையாசிரியையார் ஆனார்.

இருவர் முயற்சியாலும் பள்ளி மிக விரிவடைந்தது. ஆனால், பேரூதியத்திற்கும் மன்பதை நலத்திற்கும் டமான மருத்துவத் தொண்டிற்கு ஆசிரியத் தொழில் இடையூறா யிருந்தமை கண்டு, அதை 1890-ல் விட்டுவிட்டு, மிஷன் தெருவிலுள்ள ஒரு சிறு வீட்டைக் குடிக்கூலிக் கமர்த்திக்கொண்டு, உலகப் புகழ்பெற்ற தம் மருத்துவத் தொண்டைப் பண்டிதர் தொடங்கலுற்றார். மருந்து விற்பனைக்காகப் பலவூர் சென்றபோது பல பெரியார் துணையுங் கிட்டியது. அப் பெரியாருள் திருப்பாதிரிப்புலியூர்த் திருப்பெருந்திருச் சண்முக மெ-ஞ்ஞான சிவாசாரியார் ஒருவராவர். குழந்தை மருத்துவத்திற்கும் கட்டிக் கா-ச்சலுக்கும் (plague) கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள் ஒப்புயர்வற்றவையாதலின், அவை இந்தியா, ஈழம், கடாரம் (பர்மா), மலையா, சாவகம், சைகோன், மடகாஸ்கர் முதலிய பல நாடுகளிலும் பரவிக் குன்றன்ன செல்வங் குவிந்தது. இதற்குள், நான்கு புதல்வரும் ஏழு புதல்வியரும் பிறந்திருந்தனர். 1893-ல் ஒரு பெருமனையும் விலைக்கு வாங்கப்பெற்றது. பண்டிதர் தம் அளவிறந்த தமிழ்ப் பற்றி னாலும், தம் முன்னோரான பண்டைத் தமிழர்க்கு இடைக்காலத் தெழுந்த பழியை நீக்குதற்பொருட்டும், இரவு பகலா- இசையாரா-ச்சி செ-தும், ஆறு இசை மாநாடுகள் கூட்டியும், 1208 பக்கங்கொண்ட கருணாமிர்த சாகரம் என்னும் இசைத்தமி ழாரா-ச்சி நூலை இயற்றி 1917-ல் வெளியிட்டார். ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகளா-த் தமிழ்ப் பகைவரால் மறைக்கப் பட்டு வேறொருவர்க்கும் தெரியாது கிடந்த இசைத்தமிழை ஓரளவு வெளிப்படுத்திய பண்டிதர், ஆரிய மறை களைத் திருடி ஆழ்கடலி லொளித்த சோமுகனைக் கொன்று அவற்றை மீட்டதாகக் கூறும் திருமாலின் மீனத்தோற்றரவை (மச்சாவதாரத்தை) ஒருபுடை யொப் பாரன்றோ!