உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

காட்டுவதாலும், பிறமக்கள் பேசுமுறையை நடித்துக் காட்டுவதாலும் அறியலாகும். சிலர், பிறர் பேச்சை மட்டுமன்றிச் செயல்களையும் நடித்துக் காட்டிப் பேசுவர். எல்லா மக்களும் பேசுங்காற் சிற்றளவாக வோ பேரளவாகவோ கையாளும் சைகை களும், நடிப்பின்பாற் பட்டனவே. அதோடு, உள்ளத்திலெழும் தொண்சுவை (நவரசங்களும்) குறிப்பு விறல் (சத்துவம்) மெ-ப்பாடு

முதலியனவாகப்

பேச்சோடு வெளிப்படுவதும் அவிநயம் என்னும் நடிப்பாதலானும், ஒருவகை யுணர்ச்சியுமின்றி ஒருவர் பேச்சுமிராதாகலானும், பேச்சு இசையொடு மட்டுமன்றி நடிப்பொடுங் கூடியதென்பது தெள்ளத் தெளிவாம்.

பண்டைத் தமிழிலக்கணியர், பொருள்களின் உண்மையியல்பை நுணுகியா-ந்து கண்ட மெ-ப்பொருளுணர்வு வல்லோ ராதலின், பேச்சுடன் இசையும் நடிப்பும் விரவியிருப்பதைக் கண்டு, இசை நாடகக் கலைகளை மொழிப்பகுதி யாக்கினர்.

பிற்காலத்தில், இயலினின்று இசை நாடகம் வேறாயுணரப் பட்டது மட்டுமன்றி, வடநாட்டினின்று வந்த சில மதக்கொள்கைகளால், இவ்விரு கலைகளும் இழிவிற்கும் வெறுப்பிற்கும் இலக்காகி ஓரளவு மறைத் தொழிக்கவும் பட்டன.

இனிமேலாயினும், தமிழர் தம் முன்னோர் தந்த முத்தமிழ்க் கலைகளைப் பொன்னேபோற் போற்றுவாராக.

பயிற்சி

பின்வருபவற்றைப் பற்றி விளக்கியற் கட்டுரை வரைக:

1. வானொலி. 2. அணுக்குண்டு. 3. இந்தியாவின் இயற்கைப் பாதுகாப்பு. 4 தற்செயல் நேர்ச்சியால் சரித்திரத்தில் விளைந்தவை (The part played by accident in History). 5. கடலில் நின்றையஞ் செ-யப்பட்ட பெருஞ் சரித்திரக் காரியங்களை (Great Historical issues decided at sea). 6. மறுமலர்ச்சி ( Renaissance). 7. தற்கால அடிமைத்தனம். 8. முற்கால தற்கால ஒழுக்கக் கருத்தீடுகள் (Ideals of character in Ancient and Modern Times). 9. மனத்தைத் திருத்தும் வழிகள் (Modes of improving the mind). 10. அறிவியற் கலையைப் பற்றிய தவறான கருத்துகள். 11. பற்றாட்டின் பயன். 12. மூடநம்பிக்கை