உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

139

காரணம் என்ன? எத்துணையோ கலைகளிருக்கும்போது, அவற்றுள் இசை நாடகங்கள் மட்டும் ஏன் தமிழ்ப் பகுதிகளாகக் கருதப்படல் வேண்டும்?

சிலர், இசை நாடகங்கள் இன்பந்தருங் கலைகள் என்பர். சிலர், இசையறிவே ஒரு மக்களினத்தின் பண்பாட்டைக் குறிக்கும் என்பர். சிலர், கலைமகள் யாழ்முரல அவளருகிலுள்ள மயில் நடஞ்செ-கின்ற தென்பர். சிலர், சிவபெருமான் தம் இருகாதுகளிலும் ஈரியாழோரை (கந்தருவரை)த் தொங்கவிட்டுக் கொண்டு ஐயம்பலங்களிலும் திருக் கூத்தாடுகின்றனர் என்பர். சிலர், பண்டைத் தமிழர் இசை நாடகக் கலைகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பர் சிலர், தமிழானது இயலாகப் பூத்து இசையாகக் கா-த்து நாடகமாகக் கனிந்துவிட்ட தென்பர். இவையெல்லாம் காரணமும் விளக்கமுமாகா.

பின்னை யெது காரணமெனின், இசையும் நடிப்பும் பேச்சொடு இயல்பாகக் கலந்திருப்பதே காரணம் என்க. மொழியானது உண்மை யில் ஒலிவடிவாயிருப்பது. தாளவரம்புள்ளதும் இல்லதுமான இனிய ஒலி அல்லது ஓசையே இசையாம். மொழி என்பது உள்ளக்கருத்தின் வெளிப்பாடான ஒலிக் கூட்டமாதலின், அவ்வக் கருத்திற்கேற்ப ஒருவர் பேச்சு அலகேறியும் இறங்கியும் செல்லும். உணர்ச்சி மிகுந்த விடத்துச் சில சமையங்களிற் பேச்சே இன்னிசைப் பாட்டாகவும் செ-யுளாகவும் மாறுவதுண்டு. உரையும் செ-யுளுமாகிய இருவகை மொழிநடைகளுள் முன்னது பொதுமக்களும் பின்னது புலமக்களும் கையாள்வனவாகும். செ-யுள் இசைப்பாட்டைவிடக் சொற்செறிவும் அசைவரம்பும் ஓசை வேறுபாடும்

பொருட்பொலிவு முடைமையின் புலமக்கட்கு

இசைப்பாட்டிசை போன்றே செ-யுளிசையும் இன்பம் பயப்பதாகும். இதனால், பாட்டு இசை என்னும் இரு சொல்லும் இன் னிசைப் பாட்டிற்கும் செ-யுட்கும் பொதுப் பெயராகும். பெயராகும். இசையைக் குறிக்கும் பண் என்னும் பகுதியினின்று, இசைப்பாட்டைக் குறிக்கும். பாண் பண்ணத்தி என்னும் சொற்களும், செ-யுளைக் குறிக்கும் பாணி (எ-டு. தேவபாணி) என்னும் சொல்லும் பிறந்துள்ளன. மேலும், உரை நடைக்கும் ஓசை யுண்டென்பது, புலவர் நூல்களை மட்டுமன்று பொதுமக்கள் பேச்சையும் நுணுகி நோக்கின் புலனாகும்.

இனி, நடிப்பும் பேச்சொடு கலந்துள்ளதென்பது ஒருவர் விலங் கொலிகளையும் பறவை யொலிகளையும் அவற்றைப்போல வொலித்துக்