உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இக்காலத்தில் முத்தமிழையும் ஒருங்கே கற்கின்றனர். எங்ஙனமிருப்பினும், முத்தமிழ்ப் பயிற்சி நின்றுவிட வில்லை. அயன்மொழிக் கலப்பும் தனித்தனி பயிற்சியுமே இற்றை வேறுபாடாம்.

ரு

முத்தமிழுள் ஒவ்வொன்றும் இலக்கணம் இலக்கியம் என இரு திறப்படும். ஆகவே, இயற்றமிழ் இலக்கணம், இயற்றமிழ் இலக்கியம்; இசைத்தமிழ் இலக்கணம், இசைத்தமிழ் இலக்கியம்; நாடகத் தமிழ் இலக்கணம், நாடகத் தமிழ் இலக்கியம்; என முத்தமிழும் அறு திறமாம்.

தொல்காப்பியம் முத்துவீரியம் முதலியன இயற்றமிழ் இலக் கணம்; மணிமேகலை நளவெண்பா முதலியன இயற்றமிழ் இலக்கியம்; இசைநுணுக்கம் தாளவகையோத்து முதலியன இசைத்தமிழ் இலக்கணம்; பரிபாடல் தேவாரம் முதலியன இசைத்தமிழ் இலக்கியம்; செயிற்றியம் மதிவாணர் நாடகத் தமிழ்நூல் முதலியன நாடகத் தமிழ் இலக்கணம்; சபாபதி வேதாள உலகம் முதலியன நாடகத் தமிழ் இலக்கியம்; அகத்தியம் முத்தமிழிலக்கணம்; சிலப்பதிகாரம் முத்தமி ழிலக்கியம்.

ஆங்கிலத்தில் சேக்கசுப்பியரும் (Shakespeare) வடமொழியிற் காளிதாசனும் இயற்றியுள்ள செ-யுள் நாடக நூல்வகை, தமிழுக்குரிய தன்று. ஆரிய முறையைப் பின்பற்றியே, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை முதலியோர் தமிழிற் செ-யுள் நாடக நூல்கள் இயற்றினர். இசைப் பாட்டில்லாத நாடகம் தமிழருக் கேற்காது. நாடகம் நடிப்பது போன்றே உரையும் இசைப்பாட்டும் விரவி வருவதுதான், நாடக விலக்கியமாகப் பண்டைத் தமிழகத்திற் கருதப்பட்டது. அதில் செ-யுளும் இடம் பெறலாம். செ-யுள் நாடக நூல்வகை பழங்காலத் தில் தமிழில் இயற்றப் பட்டுப் பின்பு இறந்துபட்டதென்றோ; தமிழுக் கில்லாதது ஒரு குறை யென்றோ; கருதுவது தவறாகும்.

ம்

ஒரு மொழியுடன் இசை நாடகம் ஆகிய இரு கலைகளையும் மொழிப் பகுதிகளாகச் சேர்த்து அதனை முக்கூற்று மொழியாகக் கருதுவது, தமிழில் தவிர வேறெம் மொழியினும் இல்லை. பிறமொழி களிலெல்லாம், இசையும் நாடகமும் இரு கலைகளாக வழங்குகின்றன வேயன்றி, மொழிப் பகுதிகளாகக் கருதப்படுவதில்லை; தமிழில் மட்டும் இசை நாடகங்கள் மொழிப் பகுதிகளாகக் கொள்ளப்பட்ட மைக்குக்