உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

கோடைக்கானல்

தட்பவெப்பநிலை, ஆயிரக்கணக்கான

137

கல்

தொலைவிலுள்ள சமத் தட்பவெப்ப மண்டலத்திற்குரியதா- மட்டு மன்று; இந்தியா முழுமையினும் தலைசிறந்ததாயும், உலகத்திலேயே மூன்று தலைசிறந்த தட்பவெப்ப நிலைகளுள் ஒன்றாயு மிருத்தலின், அங்குச் சென்று தங்காவிடினும் ஒரு முறையேனும் அவ்விடத்தைக் கண்டு வருவது, காசி கயா மெக்கா எருசலேம் முதலிய திருப்பதி களைக் கண்டு வருவதினும் பெருநலம் பயப்பதாகும்.

பயிற்சி

கீழ்வருபவற்றைப்பற்றி வரணனைக் கட்டுரை வரைக:

1. ஓர் இயற்கைக் காட்சி. 2. ஒரு விலங்கினச் சாலை. 3. பொங்கற் பண்டிகை. 4. பனிமலை (இமயம்). 5. ஒரு மழை நாள் 6. வானொலிக் கருவியமைப்பு. 7. நாட்டு வாழ்க்கை. 8. நகர வாழ்க்கை. 9. திருக்குறள். 10. சுரங்கவேலை. 11. முத்துக் குளிப்பு. 12. இந்திய அரசியலமைப்பு. 13. மேட்டூர் அணை. 14. தாசுமகால். 15. ஒரு வீட்டு விலங்கு. 16. மிகப் பயன்படும் ஒரு மரம். 17. ஒரு தேர்தல் காட்சி. 18. ஒரு திருவிழா. 19. ஒரு பொருட்காட்சி.

3. விளக்கியற் கட்டுரை

முத்தமிழ்த் தொடர்பு

தமிழ் மிகத் தழைத்திருந்த தலைச்சங்கக் காலத்தில், தமிழ்ப் புலவர் தமிழை முத்தமிழ் எனவே, தொகுதியாகக் கருதியும் பயின்றும் வழங்கியும் வந்தனர். மக்கள் வாணாள் குறுகிய பிற்காலத்தில், முத்தமி ழையும், ஒருங்கு பயில்வார் அருகியதால், அவை வெவ்வேறு பிரிந் தன. ஆயினும், முத்தமிழ் என்னும் பெயர் வழக்கு இன்று முள்ளது.

முத்தமிழ் என்பன இயலிசை நாடகங்கள். இயல்பாகவுள்ள தமிழ் இயற்றமிழ்; அதனொடு இசை சேர்ந்தது இசைத்தமிழ்; அவ்விரு தமிழோடும் நடிப்புச் சேர்ந்தது நாடகத் தமிழ். இம் மூன்று தமிழும் சேர்ந்தது முத்தமிழ் முன்பு ஒரே யாசிரியனிடத்தில் ஒரே நூல் வாயிலா-(மொழிப்புலமை கருதிய) ஒவ்வொரு தமிழ் மாணவரும் பயின்றுவந்த முத்தமிழ்கள், இன்று பெரும்பாலும் வெவ்வேறா சிரியனிடத்தில் வெவ்வேறு நூல் வாயிலா- வெவ்வேறு மாணவரால் பயிலப்பட்டு வருகின்றன. ஆற்றலும் விருப்பமும் வசதியும் ஒருங்கே யுடைய ஒரோவொருவர்தாம்,