உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கோடைக்கானலிற் பார்க்கத்தக்க இடங்கள்: ஏரி, பூங்கா (Bryant Park), கோக்கர் உலாவழி (Coaker's Walk), வானாரா-ச்சி நிலையம் (Ob- servatory), கோபுரமலை (Pillar Rocks) முதலியனவும், வெள்ளி நீர்வீழ்ச்சி (Silver Cascade), மாயாவி வீழ்ச்சி (Fairy Falls) முதலிய பல நீர்வீழ்ச்சிகளும்; பெருமாள் மலை, கடற்பன்றி மூக்கு (Dolphin's Nose) முதலிய பல மலைப் பகுதிகளுமாகும். இவற்றுள், ஏரியானது, கோடைக்கானல் நடுவில் மூன்றேகால் கல் சுற்றளவில், இயற்கையா- அமைந்துள்ள ஓர் அழகான நீர்நிலையாகும். இதிற் படகு வசதியுண்டு. இதைச் சூழ எவ்விடத்தில் நின்று நோக்கினும், கோடைக்கானல் ஒரு மேனாட்டூர்க் காட்சியளிக்கும்.

கோடைக்கானலில்,

கட்டடமில்லாத இடமெல்லாம், குளிர்ந்த தட்பவெப்பநிலைக்குரிய மரஞ், செடி, கொடிகளடர்ந்து ஒரே பெருஞ் சோலையா-த் தோன்றும். அவற்றுள், சிள்வண்டு இரவும் பகலும் இரைந்து கொண்டிருக்கும். அங்குள்ள மரங்களெல்லாம் பெரும் பாலும் குவிந்திருப்பது, மழையில் நனைந்த மக்கள் ஒடுங்கி நிற்பது போலும். மர அடர்த்தியாலும், அடிப்பாறைகளின் நீர்க்கசிவாலும், சோலைகளை அடுத்தவுடன் குளிர்ந்த ஊற்றுணர்ச்சி யுண்டாகும்.

கோடைக்கானல் 7000 அடி உயரத்திலுள்ள தாதலின், அணில், காகம், குருவி, நல்ல பாம்பு, வீட்டுப் பல்லி, தேள், மூட்டைப்பூச்சி முதலிய உயிரிகளை அங்குக் காணவே முடியாது. கீழ்நிலத்து வீட்டு விலங்குகளும், அங்கு வாழ முடியாவாதலால், ஆட்பொருட் போக்கு வரத்தெல்லாம் இயங்கியாலேயே நடைபெறல் வேண்டும். வேதனை யுஞ் சாவும் விளைக்கும் நச்சுயிரிகள் அறவே யில்லாமையும், உடல் நலத் திற்குகந்த நிலையும், அவ்விடத்தைத் தேவருலகத்தோடீடு படுத்தும்.

கோடைக்கானலில் நாள்தொறும் மழை பெ-யினும், அது கோடைக்காலத்தில் இந்தியரெல்லாம் சென்று தங்குதற்கேற்ற இன்ப மான தட்பவெப்பநிலை கொண்டுள்ளது. பெப்ரவரிக்கும் அக்டோ பருக்கும் இடையில் என்றும் வெள்ளைக்காரர் செல்லலாம். அவருக்குக் கோடைக்காலச் செலவு இன்றியமையாதது. இரவில் எல்லாருக்கும் கம்பளியாடை வேண்டியதாகும்; அன்று வெளி நடமாட்டம் எவருக் கும் இயலாது.