உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

135

கோடைக்கானற்கு, அம்மைநா-க்கனூர் என்றும் கோடைக் கானற் சாலை என்றும் அழைக்கப்பெறும் தென்னிந்திய இருப்புப் பாதை நிலையத்திலிருந்து, நிலக்கோட்டை வெற்றிலைக்குண்டு என்னும் சிறு நகர்கள் வழியா-ச் சமநிலத்தில் சுமார் இருபது கல்லும், மலைமேற் சுமார் முப்பது கல்லும், இயங்கியிற் செல்ல வேண்டும்.

அடிவார ஏற்றத்திலேயே, அச்சுறுத்தி இயங்கிகளின் வேகத்தை மட்டிடும் செவ்வண்ணப் பலகைகள், முதன்முறை செல்வார்க்கு உட்குவருந் தோற்றத்தன. மேலே செல்லச் செல்ல, மேலுலகஞ் செல்வதுபோல் தோன்றும். அரைமலை யடுத்தவுடன், குளிர்ந்த ஆற்றுணர்ச்சி யுண்டாகிக் கம்பளி வேட்கை தோற்றுவிக்கும். உச்சியை யடைந்தபின், வேறுலகஞ் சென்றதுபோன்றும், கோடையி லன்றி வேறு காலத்தில் அங்குச் செல்ல முடியாதென்றும், உணர்ச்சி பிறக்கும்.

கோடைக்கானலை மூஞ்சிக்கல், கடைத்தெரு, வளமனைகள் (Bangalows) என முப்பகுதியா-ப் பகுக்கலாம்.

மூஞ்சிக்கல் என்பது, கடைத்தெருவிற்குச் சற்றுத் தாழ்வாக, ஒரு படைச்சால் (furlong) தொலைவில், நெருக்கமாகவும் நான்கு தெரு வாகவும் அமைந்துள்ள இந்தியர் குடியிருப்புத் தொகுதியாகும். கடைத் தெருவை யொட்டியே, அஞ்சலகமும் (post office) ஊர் காவல் நிலையமும் (police station) அரசிறையார் (tahsildar) மன்றமும் வேறு சில அரசியற் கட்டடங்களும் அமைந்துள்ளன. வள மனைகள் எல்லாம், பெரும்பாலும் கடைத்தெருவைச் சூழ, அண்மை யிலும் சே-மையிலும் இடையிட்டமைந்துள்ள தனித்தனி கட்டடங் கள். இவையே வெள்ளைக்காரரும் பெருமக்களும் தங்குவன. கோடைக்கானல் ஒரு மலைநகராதலின், ஆங்காங்குப் பற்பல இடங் கட்கும் மேட்டிலும் பள்ளத்திலும் ஏறியும் இறங்கியும் செல்ல வேண்டும். சொந்த இயங்கியில்லாத பெருமக்கட்கு வாடகை நரவண்டி (rickshaw) வசதியுண்டு.

இந்தியருக்குக் கடைத்தெருவிலும், வெள்ளைக்காரருக்கு வேறிடத் திலும், தங்கறைகளுள்ள உண்டிச்சாலைகள் உள. இருசாரார் பிள்ளை கட்கும் வெவ்வேறு பாடசாலைகளும் உள. ரோமானியத் திருச்சபை யார்க்கும் அமெரிக்கத் திருச்சபையார்க்கும் ஆங்கிலத் திருச்சபை யார்க்கும் வெவ்வேறு கோவிலுண்டு.