உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

பொருள் தருவதாலும், அங்குப் பல சோலைகளிருப்பதாலும், கோடைக் கானல் என்னும் பெயர் கோடைக்காலத்தில் மக்கள் புகும் சோலையூர் என்று பொருள்படலாம். ஆயின், கடிய நெடுவேட்டுவன் என்னும் தலைவனைக் கோடைமலைக்குரியவன் என்று ஒரு புறநானூற்றுச் செ-யுள் (206) குறிப்பதாலும்; கோடை பாடிய பெருந்தேவனார் என்றொரு புலவர் கடைச்சங்கத் திறுதியி லிருந்ததனாலும்; கோடைக் கானலைச் சூழ வில்பட்டி, வெள்ளக்கவி, மன்னவனூர், பூம்பாறை முதலிய பல பழைமையான ஊர்கள் இருப்பதாலும்; அப்பக்க மெல்லாம் கற்காலக் குடியிருப்புகள் காணப்படுவதாலும்; வில்பட்டி யில் பாண்டியன் கல்வெட்டிருப்பதாகச் சொல்லப்படுவதாலும்; முற் காலத்தில் பழியரும், இடைக்காலத்தில் புலையரும் குன்றவருமே, கோடைக்கானலில் குடியிருந்திருப்பதாலும்; கடிய நெடுவேட்டு வனின் கோடைமலையே இன்று நாம் கூறும் கோடைக்கானல் மலை என்று கொள்ள இடமுண்டு. ஆயினும், மீண்டும், அக் கோடைமலை காலத் தாற் பெயர் பெற்றதோ என்னும் ஐயம் தீர்ந்தபாடில்லை.

கோடைக்கானல் சிற்றூராயும் முற்றும் இந்தியர் குடியிருப் பாயும் இருந்தபோது, முதன்முதல் 1821-ல் லெப்டினண்டு வார்டு துரைமகனார் (Lieut. B.S. Ward) நில அளவைக்காக அங்குச் சென்றார். அதன்பின், கோடைக்கானல், துரைமார் கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காக செல்லத்தக்கது என்னுங் கருத்துப் பரவிற்று. முதன் முதல் 1824-ல் மதுரை அமெரிக்கன் மிஷன் கழகத்தார் அங்கு இரு வளமனைகள் கட்டினர். பின்பு பற்பல கழகத்தாரும் தனிப்பட்ட வரும் ஒவ்வொன் றாகப் பல வளமனைகளைக் கட்டி, 1899-ல் கோடைக் கானல் ஒரு கூற்றமாகவும் (Taluk) நகராண்மையூராகவும் வகுக்கப் பெற்றது. முதலாவது, அங்கிருந்த இந்தியர் புலையரும் குன்றவருமே. பின்பு கீழ்நிலத்திலிருந்து செட்டிமாரும் வேளாளரும் முகமதியரும் தெலுங் கரும் பிறரும் வந்து பழங்குடி மக்களினின்று நிலங்களைப் பல வகையிற் பற்றிக்கொள்ள அவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டனர். இதுபோது அங்கு இழிதொழில் செ-பவர் பறையரும் சக்கிலியருமாவர்.

தற்போது கோடைக்கானலில் நிலையாக இருப்பவர் ஏறத்தாழ ஈராயிரவரும், கோடைக்காலத்தில் வந்து ஒரே சமையத்தில் தங்குபவர் ஏறத்தாழ ஆயிரவருமாவர். பின்னவருட் பெரும்பாலார் முன்பு வெள்ளைக்காரர்; இன்று இந்தியர்.