உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ளாசையாலும் குறுகிய உறவு மனப்பான்மையாலும், ஒரோ சமையம் சற்று விரியும் நோக்கும் விரைந்து குறுகிவிடுகின்றது.

ம்

இந் நிலவுலகம் மந்திரத்தால் அந்தரத்தில் நிற்கும் பந்துபோல், ஆகாயத்தில் நின்றுருள்கின்றது என்னும் உண்மையை நினைக்கும் போது; இவ் வுலகத்திற்கு மேலும் கீழும் இருப்பது போன்றே பக்க வாட்டிலும் ஆகாய மிருக்கின்றதென்றும்; ஆகவே எத்திசையிலும் எப் புறத்திலும் நோக்கினாலும், ஒரே அளவான வான்வெளி நிலவுல கத்தைச் சூழ இருக்கின்றதென்றும் அறியலாகும்.

இந் நிலவுலகத்தில் எவ் இடப்பகுதிக்கும் ஓர் அளவு அல்லது எல்லையுண்டு. நாம் அதனை முட்டித் திருப்பலாம். 12,450 கல் தொலைவு சென்றால், 24,900 கல் சுற்றளவுள்ள இந் நிலவுலகத்தின் எல்லையையே முட்டித் திரும்பிவிடலாம். ஆயின், ஆகாயத்திற்கு ஓர் எல்லை யுண்டோ? எத்திசையிலாயினும் அதனை முட்டித் திரும்ப முடியுமோ? அதற்கு ஓர் எல்லை யுண்டெனின், அதற்கப்பால் என்னுளது? அதுவும் ஆகாயந்தானே! அது எங்குதான் முடிகின்றது? கோடிக் கல் தொலைவிலா? அல்லது ஆயிரங்கோடிக் கல் தொலை விலா? அல்லது நூறு கோடிக்கல் தொலைவிலா? அல்லது, ஒருவன் ஒருநாள் முழுதும் ஓர் எண்ணின்பின் சுன்னம் இட்டுக்கொண்டே சென்றால் எந்த எண் வருமோ, அந்த எண்ணுள்ள பல்கோடிக் கணக்கான கல் தொலைவிலா? அல்லது நம் உள்ளமானது ஒரு நொடிக்கு நூறிலக்கங் கோடிக் கல் வேகஞ் செல்வதாக வைத்துக் கொண்டு நூறாண்டு வழிச்சென்றபின் அடையுந் தொலைவிலா? இல்லை, இல்லை. இல்லவேயில்லை. போகப் போக ஆகாயமும் போ-க்கொண்டே யிருக்கின்றது. அதற்கு எல்லையே இல்லை. எத்திசையை நோக்கினாலும் இவ் வியல்பே. இது எண்ணுக்கும் எட்டாதது. நாம் தொலைவாகச் செல்லச் செல்ல, 7,900 கல் குறுக் களவுள்ள ஞாலமும் (பூமியும்) சிறிது சிறிதா-ச் சிறுத்து, இறுதியில் இருந்த இடமும் தெரியாமல் மறைந்துவிடுகின்றது. இத்தகைய நிலை மையில், இறைவனார் ஓருலகத்தை அல்லது மூவுலகத் தைத்தானா படைத்திருப்பார்?

கதிரவனைச் சூழத் தொண்கோள்கள் (நவக்கிரகங்கள்) உண் டென்றும், அவற்றுட் பலவற்றிற்கு ஒன்றோ பலவோ துணைக் கோள் களும் உண்டென்றும், உள்நிலைக் கோள்கள் இடைநிலைக் கோள்கள்