உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

143

50,

அதோடு,

கொண்டே

வெளிநிலைக் கோள்கள் ஆகிய மூவகையுள் இடைவகை மட்டும் 000 இருக்கலாமென்றும், வானநூலார் கண்டுள்ளனர்.

ஒவ்வொன்றா-ப் புதுக்கோள்களும்

கண்டுபிடிக்கப்பட்டுக்

வருகின்றன. வானத்திலுள்ள வெள்ளிகட்குக் கணக்கேயில்லை. காணப் பட்டனவே இத்துணையாயின், காணப்படாதவை எத்துணை யோ! பல வெள்ளிகள் கதிரவனிலும் கோடிக்கணக்கான மடங்கு பெரியன என்றும், மதியுஞ் செவ்வாயும் மக்கள் குடியிருப்பிற் கேற்றனவென்றும், சொல்லப் படுகின்றது. ஆகையால், இறைவன் படைத்தவை அல்லது இயற்கையா யுள்ளவை எத்தனை அண்டங் களோ? மேலும் நாம் இராவானத்தில் தோன்றும் வெள்ளிகளையன்றி, பகல் வானத்தில் உள்ள வெள்ளிகளைக் காண்பதில்லை.

கதிரவக் குடும்பத்தில் (Solar System) மிகத் தொலைவான கோளாகிய குபேரன் (Pluto) கதிரவனிடத்திலிருந்து 3, 670,000,000 கல் தொலைவிலுள்ளது. கதிரவனொளி ஒரு நொடிக்கு 186,000 கல் வீதம் இயங்குகின்றது. ஆயினும், வெளியின் அளவோ, கதிரவக் குடும்பமும் இருந்த இடம் தெரியாமல் மறையும்படி விரிவுற்றதும், எண்ணுக்கும் எட்டாதபடி எல்லையற்றதுமா யிருக்கின்றது. ஆகை யால், அண்டங் கள் மட்டுமன்றிக் கதிரவக் குடும்பங்களும் எத்துணையோ என்று வியத்தற்கிடமா யிருக்கின்றது.

னி, தேவருலகமும் வீட்டுலகமும் மேலே யுள்ளன என்று, எல்லா மதத்தாராலுஞ் சொல்லப்படுகின்றது. ஞாலம் நாள்தொறும் கீழும் மேலுமாக உருண்டுகொண்டே யிருக்கின்றது. பாரின் பரப் பாலும் நிலக்கவர்ச்சியாலும் நாம் எப்போதும் ஞாலத்தின் மேனோக் கிய பகுதியிலேயே இருப்பதாகத் தோன்றினும்; உண்மையில நாம் நாள் தொறும் கீழும் மேலுமாகத் திசை மாறிக் கொண்டுதான் வரு கிறோம். பகற்காலத்தில் மேனோக்கிய பகுதியிலும் இராக்காலத்தில் கீழ் நோக்கிய பகுதியிலு மிருப்பதால்தான், நமக்குப் பகலிரவுகள் தோன்று கின்றன. நாம் குறிக்கும் மேலிடம், என்றும் ஒரே திசையிலிருப்ப தாகத் தோன்றினும், உண்மையில், மேலுங் கீழுமாக மாறிக்கொண்டு தான் வருகின்றது. ஆகையால், தேவருலகம் அல்லது வீட்டுலகம் மீத்திசையி லுள்ளதென்று கருத்தளவிற் கொண்டாலும், உண்மையில் உணர்ச்சி யில்லாமல் ஞாலத்தைச் சூழ்ந்த வட்டமான திசை முழுவதையும், அத் தேவருலக அல்லது வீட்டுலகத் திசையாகக் குறித்து வருகின்றோம். இதன்படி,