உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

145

12.

சிறுமையும் தான்றர வருமே'. 9. நடந்து காட்டுவதே நல்ல கற்பனை. 10. பிறப்பாற் சிறப்பில்லை. 11. சிறு துரும்பும் பல்லுகுத்த உதவும். அழிப்பாலும் ஆக்கமுண்டாம். 13. தட்பவெப்ப நிலையால் மக்க ளிடை வேறுபடுவன. 14. பிறர் நலம் பேணல். 15. பல்வகை வயவர் (வீரர்). 16. கடவுள் ஏன் உலகங்களைப் படைத்தார்? 17. பண்பாடு (Culture)

5.பாணிப்புக் கட்டுரை

எதிர்கால அறிவியல் வளர்ச்சி

மாந்தன் தோன்றிய காலத்திலிருந்து, அறிவியற்கலை வளர்ந்து கொண்டு வருகிறது. சிலர், அறிவியற்கலை தற்காலத்திற்கே யுரிய தென்பர். அது தவறாகும். எந்தக் கட்டடமும் அடிப்படையின்றி யெழாததுபோல, எந்தக் கலையும் அடிப்படையின்றித் தோன்றாது. எவ்வகைக் காரியத்தை எடுத்துக்கொள்ளினும், அதன் அடிப்படை நிலைகட்கு அதிகக்காலம் செல்லத்தான் செல்லும். ஒரு காரியத்தின் நிலைகள், கீழ்ப்படக் கீழ்ப்பட நீண்டகாலத்திலும், மேற்பட மேற்படக் குறுகிய காலத்திலும் அமைவது இயல்பு. தற்கால அறிவியலுக்கு முற்கால அறிவியல் அடிப்படையாதலின், அது மெல்லமெல்ல வளர்தற்கு நீண்டகாலஞ் சென்றது. முற்கால அறிவியலுக்குத் தற்கால அறிவியல் மேற்படையாதலின், அது விரைந்து வளர்கின்றது. இவ் வேகத்தினால், தற்கால அறிவியலே அறிவியலென்றும், முற்கால அறிவியலுக்கும் இதற்கும் தொடர்பில்லையென்றும் கொள்வது தவறாம்.

தற்கால அறிவியல் 18ஆம் நூற்றாண்டில் தொடங்கிற் றென்ன லாம். 1765-ல், நீராவியியந்திரம் இங்கிலாந்தில் சேம்சு வாட் (James Watt) என்பவரால் புனைவு செ-யப்பெற்றது. அன்று நீராவி யூழி தொடங்கிற்று. 1835-ல், அமெரிக்காவில், மார்சு (Morse) என்பவரால் மின்சாரத் தொலைவரைவு (Electric Telegraph) புனைவு செ-யப் பெற்றது. அன்று மின்சாரவூழி தொடங்கிற்று. இவ்விரு புதுப் புனைவு களின் பயனாக, மேலும் மேலும், பல்வேறு புதுப்புனைவுகள் ஒவ்வொன்றா-க் கண்டுபிடிக்கப்பட்டும் புனையப்பெற்றும் வருகின்றன. ஒவ்வொரு புதுப்பொருளும் கொஞ்சக்காலந்தான் புதிதாயிருக்கும்; பின்பு பழகப் பழகப் பழைமையா-ப் போ-விடும். ஆதலால், கடந்த இருநூற்றாண்டிற் புதுப்புனைவு செ-யப்பெற்றவை யெல்லாம், இன்று பழைமையா யுள்ளன.