உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அறிவியல் இன்று விரைந்து வளர்வதனாலும், அதற்கோர் எல்லை கூற முடியாமையாலும், எதிர்கால அறிவியல் எத்துணை வளர்ச்சி பெறுமென்று திட்டவட்டமா-ச் சொல்லற்கியலாது. ஆயினும், நிகழ்கால நிலையைக் கொண்டு எதிர்கால நிலையை ஒருவாறு ஊகித் துணரலாம்.

முதலாவது, இதுபோது செல்வர்க்கே கிட்டுகின்ற பல அறிவியல் வசதிகள், எதிர்காலத்தின் ஏழைகட்கும் கிட்டலாம். இப்போது இயங்கிப் போக்குவரத்து நடைபெறுவது போன்றே, எதிர்காலத்தில் வானூர்திப் போக்குவரத்தும் பெருவாரியா- நடைபெறலாம்.

அமெரிக்காவில், பெருநிலக்கிழவர் மட்டும் 'வெள்ளி ஊதா தியம்' (Silver Iodide) என்னும் ஒரு புனைகலவைப் பொருளை வான் வழியாக முகில் மண்டலத்திற் செலுத்தி, செயற்கை மழையை வேண்டியாங்கு பெ-வித்துக் கொள்ளும் முறையை, நாளடைவில் அங்கும் பிறநாட்டிலும் அரசியலாரே மேற்கொண்டு, ஏராளமாக மழைபொழிவித்துத் தத்தம் நாட்டைப் பெருவளப்படுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு வீட்டிலும் தொலைபேசி (Telephone) அமைவ துடன், தொலைக்காட்சி (Television)யும் அதனுடன் இணைக்கப்பட்டு, பல் நேர்ப்பேச்சும் எழுத்துப் போக்குவரத்தும் இடம்பெயர்வும் இல் லாமலே காரியங்கள் நடைபெறலாம்.

இப்போது புனையப்பெற்றுள்ள இயந்திர மூளை கொண்ட இயந்திர மாந்தனே அமைக்கப்பெற்று, அதன் வாயிலா- மாந்தன் செ-யும் பல வேலைகளும் செ-விக்கப் பெறலாம். இரு ரு பகை நாடுகள் இயந்திர மாந்தர் படைகளைக் கொண்டே போர் புரிந்து, பெரும்படை நாடு அல்லது வன்படை நாடு வெற்றிபெறலாம்.

இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய உயிருள்ள பொருள் களும் அவற்றின் உறுப்புகளும் போன்றே, உயிரற்ற கல் மண் முதலிய இயற்கைப் பொருள்களின் சத்தும் முதன்மையான உணவா கலாம். இப்போதே கல் இரும்பு பொன் முதலியவற்றின் சத்தும் நீரும் மருந்தாக உட்கொள்ளப் பெறுகின்றன. எதிர்காலத்தில் இவை உயிர் வாழ்க்கைக்குப் போதிய உணவாக அமையலாம் என்பதில் வியப் பில்லை. மருந்தும் ஒருவகை யுணவென்றும், உணவும் ஒருவகை மருந்தென்றும், அறிதல் வேண்டும். நலக்காலத்தில் உண்பது உணவு; நோ-க்காலத்தில் உண்பது மருந்து.