உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

147

ஒருவருக்கு நோயாலோ சேதத்தாலோ வாழ்க்கையில் நேர்ந்த உறுப்புக் குறையை, பிற மாந்தனின் அல்லது விலங்கின் உறுப்புக் கொண்டு நிறைக் கின்றனர். எதிர்காலத்தில், பிறவியிலமைந்த உறுப்புக் குறையைக்கூட இம் முறையில் நிறைக்கலாம். மாந்தன் சராசரி வாழ் நாளை நீட்டிக்கப் பல வழிவகைகள் கண்டுபிடிக்கப்படலாம். இனி, எல்லா அறிவியற் புதுமை கட்கும் கொடுமுடியாக, இறந்த மாந்தனே உயிர்ப்பிக்கப்பெறலாம். இது எல்லார் நிலையிலும் இயலாவிடினும், சிலர் நிலையிலாவது இயன்று அவர் வாழ்நாள் நீட்டிக்கப் பெறலாம்.

அங்ஙனம், முற்காலத்தில் யோகியற் சித்தர் அடைந்த பற்பல சித்திகளை, எதிர்காலத்தில் அறிவியற் சித்தரும் அடைந்து, அவற்றைப் பிறர்க்கும் பயன்படுத்துவார் என்பது வீண் கனவாகாது.

பயிற்சி

பின்வருபவற்றைப்பற்றிப் பாணிப்புக் கட்டுரை வரைக:

2.

7.

1. நீர் முதலமைச்சரானால் நாட்டிற்கு என்ன நன்மை செ-வீர்? உமக்குப் பத்தாயிரம் உருபா பரிசு கிடைத்தால் அதை எங்ஙனம் செலவிடுவீர்? 3. அஃறிணை யுயிரிகளும் பேசுமாயின் என்ன நேர்ந் திருக்கும்? 4. கடந்த போரில் இற்றிலர் (Hitler) வென்றிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? 5. மேனாட்டார் இந்தியாவிற்கு வந்திராவிட்டால், இந்தியா இப்போது எந்நிலையில் இருந்திருக்கும்? 6. மாந்தன் நிலை வாணனாயின் (நித்திய வாசியாயின்) என்னென்ன நேர்ந்திருக்கும்? புலவரெல்லாம் பெருஞ்செல்வராயிருந்திருப்பின் இலக்கியம் தோன் றியிருக்குமா? 8. உள்ளத்தை யறியுங் கருவி கண்டு பிடிக்கப்படின், என்னென்ன மாறுதல் நேரும்? 9. கூண்டிலடைக்கப் பட்ட ஒரு காட்டு விலங்கு என்னென்ன நினைக்கலாம்? 10. கணவன் கொலையுண்டதை யறிந்த கண்ணகி மனநிலை எவ்வாறிருந்திருக்கும்? 11. எல்லாருஞ் செல்வராயின் எவ்வாறு வாழ்க்கை நடைபெறும்?

6. தருக்கியற்

கட்டுரை

அறிவியலால் நன்மையா? தீமையா?

இக்கால வுலகின் உயர்வுக்குரிய காரணங்களுள் அறிவியலும் ஒன்றாம். மாந்தன் மகிமை, பழங்காலத்திற் சித்து வாயிலா-விளங்கி வந்தது போன்று, இக்காலத்தில் அறிவியல் வாயிலா- விளங்கி வரு கின்றது. அறிவியலால் மாந்தன் பெற்றுள்ள பேறுகள் அளவிடுந் தரத் தனவல்ல. ஆயினும்,