உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இந்தியருட் சிலர் அவற்றை ஒப்புக் கொள் ளாமல், அறிவியலால் என்றுந் தீமையே என்று வா-கூசாது, அறைந்து வருகின்றனர். இது, அறிவினாற் கேடும் அறியாமையால் ஆக்கமும் உண்டாகும் என்று கூறுவது போலாம்.

அறிவியலால் தீமையேயன்றி நன்மையில்லை. எந்தக் கைத் தொழிலிலும், இயந்திரம் வந்தபின் பலர்க்கு வேலை யில்லாமற் போயிற்று. முந்நூற்றுவர் வேலை செ-த நெசவுச் சாலையில், இன்று மூவரே வேலை செ-கின்றனர். நூற்றுக்கணக்கான பெண்டிர் குத்தின நெல்லை, இன்று ஒரே இயந்திரம் அரைக்கின்றது. புகைவண்டியும் இயங்கியும் வந்தபின், பல்லாயிரக்கணக்கான மாட்டுவண்டி குதிரை வண்டிக்காரருக்கும் கூலியாள்களுக்கும், பிழைப்பில்லாது போயிற்று. இங்ஙனம், எத்துறையை நோக்கினாலும், அறிவியலாற் பெருங் கேடே விளைந்துள்ளது எனின்; அஃதன்று. இயந்திரங்களின் பொது வான பயன், எத்தொழிலையும் பெருவாரியாகக் குறுகிய காலத்திலும் குறைந்த செலவிலும் அழகாகவும் வசதியாகவும் உறுதியாகவும் செ-வதே. தொல்காப்பிய வுரையை ஒருவர் ஏட்டில் எழுத்தாணி கொண்டெழுதத் தொடங்கின். அதை முடிக்க மும்மாதம் ஆகுமே! அதற்கெவ்வளவு கூலியாகும்! அப்புத்தகம் முழுதும் ஓர் எடுப்புச் சுமையாகுமே! எவ்வளவு போற்றினும் சில்லாண்டில் அது சிதைந்து விடுமே! ஒரு புத்தகத்திற்கே இப் பாடாயின், இனிப் பல புத்தகத்திற்கு எப்பாடு! அச்சியந்திரமாயின், அழகிய பளபளப்பான உறுதியுள்ள வெண்டாளில், தெளிவான மங்காத முத்துப்போன்ற எழுத்துகளில், மும்மாதத்திற்குள் பல்லாயிரக்கணக்கான தொல்காப்பியப் படிகளைக் குறைந்த விலைக்கு எளிதாக எடுத்துக் கொள்ளலாமே! திருச்சியி லிருந்து ஒருவன் சென்னைக்கு மாட்டுவண்டியிற் செல்லின், சேதமும் பறிகொடுப்பு மில்லாமற் சேரினும், ஒரு மாதமாகுமே! இன்றோ, புகைவண்டியில், அரைநாளில், குறைந்த செலவில், வசதி யாகவும் பாதுகாப்புடனும் சென்று சேரலாமே! இதுமட்டுமா? உலக முழுதும் ஒரு வாரத்திற்குள் வானூர்தியிற் சுற்றி வரலாமே! இவையெல்லாம் எத்துணை வசதி! இவை இயந்திரமில்லாமல் இயலுமா? அன்றி, இவையின்றி இக்காலத்து வாழ்வதும் ஒரு வாழ்வா? ஆகவே, இயந்திரத்தினால் பலவகையிலும் நன்மையே விளைகின்றதென்பது தெளிவு. ஏதேனும் ஓர் இயந்திரத் தினால் சிலர்க்கோ பலர்க்கோ வேலையில்லாமற் போகின், அவர் வேறு