உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

149

வேலை மேற்கொள்வதன்றி, அவ் வியந்திரத்தின்மேற் குறை கூறுவது சற்றும் பொருந்தாது என்க.

ஆம். நீர் கூறியதொக்கும். ஆயின், இயந்திரங்ளெல்லாம் மிக வுயர்ந்த விலயிைனவாதலின், பெருஞ் செல்வர்க்கே அவற்றை வாங்க இயலும். இதனால், முதலாளித்துவமன்றோ முன்னினும் பன்மடங்கு பெருகுகின்றது? இதனால் நாட்டிற்குக் கேடுதானே யெனின்; அக் கேடு இயந்திரத்தினால் வருவதன்று; சீர்கேடான சமுதாய அரசியல் முறைகளால் வருவது. இவற்றைச் செம்மையாக்கின், அக் கேடும் நீங்கி விடும் என்க.

சரி. நீர் சொல்வது உண்மைதான். ஆயினும், இயந்திரத்தினால் அழிப்புத்தொழில் மிகுகின்றதே! பத்துக் கற்பரப்பும் ஒரு பட்டினமும் ஒரே நொடியிற் பாழாகச் செ-யும் அணுக்குண்டைப்பற்றி, இதற்கு முன் என்றேனும் கேட்டதுண்டோ வெனின்; கேட்டதில்லை. ஆயின், அழிப்புத் தொழில் எக்காலத்தில்தான் இல்லாதிருக்கின்றது? மக்கள் கூடி வாழத் தொடங்கியதிலிருந்து, பகையும் போரும் தொடர்ந்து தான் வருகின்றன. அழிப்புத் தொழில் இல்லாத போர் ஏதேனும் உண்டோ? ஒரு முளையை நகத்தாற் கிள்ளிவிடலாம். ஒரு செடியைக் கையால் முறிக்க வேண்டும். ஒரு கன்றைக் கத்தியால் அறுத்து விடலாம். ஆனால், ஒரு மரத்தைக் கோடரி கொண்டல்லவா வெட்ட வேண்டும்? இங்ஙனமே, முற்காலத்தில் சிறு படைகளைச் சிறு கருவி களைக் கொண்டு அழித்து வந்தனர். மக்கட் பெருக்கமுள்ள இக் காலத்து மாபெரும் படைகளை, அணுக்குண்டாலன்றி வேறு எக் கருவியால் அழிக்க முடியும்? மேலும், மக்கட் பெருக்கம் இடையறாது தொடர்ந்து நிகழ்வதாலும், மக்கட் குணவளிக்கும் மாநிலம் ஒரு குறித்த தொகை யினர்க்கே உணவளிக்கக் கூடிய அளவினதா யிருத்தலாலும், அழிப்புத் தொழிலின்றி ஆக்கத் தொழிலே நிகழ்வ தாயின், சிறிது காலத்திற்குள் நிற்க இடமில்லாதபடி மக்கள் நிறைந்து ஒருவரை யொருவர் வெட்டிக் கொல்லும் நிலைமையே ஏற்படும் என்க.

“நெட்டிடையிட்டுப் பிள்ளை பெறுகின்றவனும் இருபத்தைந் தாண்டில் இரட்டித் திருக்கின்றான். இவ் வேகத்திற் செல்லின், ஆயிரம் ண்டிற்குள் அவன் எச்சத்திற்கு உண்மையில் நிற்க நிற்க இடமும் இல்லாமற்போம்" என்று டார்வின் கூறுதல் காண்க.